For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் வாரமாக மாறிய காதலர் தினம்… கோடிகளில் வர்த்தகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பிப்ரவரி 14 ம் தேதி உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ‘வேலண்டைன்ஸ் டே' கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள் இன்றைக்கு வர்த்தகமாக மாறிவருகிறது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அன்பை வெளிப்படுத்தும் இந்தநாளில் கிப்ட் என்ற பெயரில் ரோஜாக்களும், நகைகளும் கோடி கோடியாய் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருநாள் மட்டுமே கொண்டாப்பட்ட இந்த தினம் இப்போது ஒரு வாரமாக மாறிவிட்டது.

பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை விற்பனை செய்யும் விதமாக காதலர்கள் வாரம் கடைபிடிக்கின்றனர். வர்த்தக ரீதியாக எத்தனை கோடி வருமானம் பார்த்துள்ளனர் காதல் வியாபாரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

காதல் வாரத்தின் கணக்கு

காதல் வாரத்தின் கணக்கு

ரோஜா தினம் தொடங்கி,காதலை வெளிப்படுத்தும் தினம்,சாக்லேட் தினம், டெடி தினம்,வாக்குறுதி தினம், முத்த தினம், தழுவும் தினம், காதலர் தினம் என ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் முழுக்க கல்லா கட்டத்தான் இந்த ஏற்பாடு. காதலர்கள் பாடுதான் பாவம்.

அதிக செலவு அதிக காதல்

அதிக செலவு அதிக காதல்

காதலுக்காக அதிகம் யார் செலவு செய்கின்றனரோ அவர்கள் அதிகமாக காதல் வைத்துள்ளனர் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது. எனவே அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக 126 டாலர்கள் காதலர் தினத்திற்கு செலவு செய்கின்றனராம்.

பணத்தை பண்ணும் திட்டங்கள்

பணத்தை பண்ணும் திட்டங்கள்

காதலியுடன் ஹெலிகாப்டரில் சுற்றுங்கள் என்பது தொடங்கி பிரம்மாண்டமான பார்ட்டி வரை திட்டங்களை அறிவித்து காதலர்கள் மூலம் கோடி கோடியாய் வருமானம் பார்க்கின்றனர்.

3பில்லியன் நகைகள் விற்பனை

3பில்லியன் நகைகள் விற்பனை

அமெரிக்காவில் 30 ஆயிரம் நகைக்கடைகளில் 3 பில்லியன் நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 11 பில்லியன் அளவுக்கு சாக்லேட்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது காதலர் தினத்திற்கு காஸ்ட்லியான ஐபோன், டேப்ளட் போன்றவை பரிசுப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

சிவப்பு ரோஜாக்கள்

சிவப்பு ரோஜாக்கள்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு காதலர் தினத்திற்கு 21 மில்லியன் சிவப்பு ரோஜாக்கள் விற்பனையாகியுள்ளன. உலகம் முழுவமும் ஹால்மார்க் என்ற ரோஜா நிறுவனம்180 மில்லியன் சிவப்பு ரோஜாக்களை விற்பனை செய்துள்ளது.

காதலர் தின செலவு

காதலர் தின செலவு

கடந்த ஆண்டு காதலர் தினத்திற்காக அமெரிக்காவில் 17.6 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.6 சதவிகிதம் அதிகம் என்று அமெரிக்காவின் தேசிய விற்பனை சில்லறை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய

குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய

வர்த்தகத்தையும் தாண்டி சீனாவில் காதலர் தினத்தை ஒட்டி நவீன சுயம்வரம் நடக்கிறது. அங்குள்ள ஷாங்காய் நகரின் மக்கள் சதுக்கத்தில் பிப்ரவரி 13ம் பெற்றோர்களும், இளம் வயது பிள்ளைகளும் கூடுகின்றனர். தங்களின் பெயர், வயது, உடல்தகுதி, வேலை, சம்பளம் ஆகியவற்றை எழுதி ஒரு மரத்தில் சீட்டு கட்டி விடுகின்றனர். அதை படித்து பிடித்தவர்கள் ஒன்றாக இணைகின்றனர்.

வீதியில் திருமணம்

வீதியில் திருமணம்

இதேபோல் சீனாவில் நேக்டு வெட்டிங் என்ற கலாச்சாரம் பரவலாகி வருகிறது. அதாவது வீடு, கார் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லாத காதலர்கள் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வீதியில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அந்தரத்தில் திருமணம்

அந்தரத்தில் திருமணம்

தாய்லாந்தின் பிராச்சின்புரி மாகாணத்தில் உள்ள மலையில் ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் குவியும் காதலர்கள் மலையில் இருந்து கயிறின் மூலம் குதித்து அந்தரத்தில் திருமணம் செய்து கொள்கின்றனராம்.

பரிசு கொடுத்தால்தான் காதலா?

பரிசு கொடுத்தால்தான் காதலா?

காதலர் தினம் வர்த்தகமாக மாறியதை அடுத்துதான் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசளித்தால் மட்டுமே காதலை உணர்த்த முடியும் என்பதில்லை. உண்மையான அன்பு இருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினம்தான் என்கின்றனர் உண்மையான காதலர்கள்.

English summary
Celebration of Valentines day has become business nowadays. Here is a story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X