முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்தார்.. இந்நிலையில் தான் கூட்டணியில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று அறிவிப்பதாக கூறினார். இதையடுத்து சென்னையில் இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்தார்.
வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர் கூட்டணி தொடர்பாக திமுகவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.

10 கோரிக்கைகள்
அப்போது வேல்முருகன் கடந்த முறையை விட கூடுதலாக ஒரு இடமும், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.. திமுக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தல்.
அதேபோல் மத்திய அரசு வேகைலளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஈழ தமிழர்களை விடுவித்து சொந்த நாட்டுக்கு அனுப்புதல், சுங்க கட்டணத்தை ரத்து செய்தல் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏற்க மறுத்த திமுக
இதனை திமுக ஏற்க மறுத்தது. கடந்த முறையை போல் ஒரு தொகுதி தருவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 10 கோரிக்கைகள் பற்றி திமுக சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் அதிருப்தியானார்.
சமாதான முயற்சி தோல்வி
இந்நிலையில் தான் கட்சி சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அளித்த பேட்டியில் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கேட்டு கொண்டதாக கூறினார்.
இதையடுத்து அமைச்சர் எவ வேலு, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை வைத்த திமுக அவரை சமாதானம் செய்ய முயன்றது.ஆனால் வேல்முருகன் சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் தான், திமுக தன்னை அழைத்து பேசவேண்டும். இல்லாவிட்டால் கூட்டணி இருந்து வெளியேறும் என்று அவர் அறிவித்துள்ளார். அதோடு திமுக தனது முடிவை இன்று அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது முடிவை இன்று அறிவிப்பேன் என்று கெடு விதித்தார்.
விலகுவதாக அறிவித்த வேல்முருகன்
இந்நிலையில் தான் சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுபற்றி வேல்முருகன் கூறுகையில், '' திமுகவிடம் ஒரு இடத்தை ஏற்க முடியாது என்று கூறினேன். தொகுதி பங்கீடு பிரச்சனை இல்லை.
ஏனென்றால் தொகுதி பங்கீடு ஒருபுறம் இருந்தாலும், அறம் சார்ந்து 10 கோரிக்கைளை முன்வைத்தோம். கோரிக்கைகைள நிறைவேற்ற வலியுறுத்தினேன். ஆனால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எங்களின் கோரிக்கையை திமுக பொருட்படுத்தவில்லை. சமூக நீதிக்கு எதிரான சக்தியை திமுக கூட்டணியில் வைத்துள்ளது.
திமுக மீது குற்றச்சாட்டு
பெரியண்ணன் பாணியில் திமுக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் சுரண்டும் திட்டங்களுக்கு மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசும் அனுமதித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். தேர்தலை சந்திப்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பேன்'' என்றார். இதன்மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது.
-
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்















Click it and Unblock the Notifications