டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன்: டெல்லி டூ கொல்கத்தா- சரக்கு விமானத்தில் சென்றாரா பிரஷாந்த் கிஷோர்? மத்திய அரசு விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் சென்றதாக சர்ச்சை வெடித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் இருக்கிறது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Centre Probe on Prashant Kishors cargo flight travel

லாக்டவுனை நீட்டிப்பது தொடர்பாக வரும் 27-ந் தேதியன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் அனைத்து வகையான பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு சரக்கு விமானத்தில் தேர்தல் வியூக வல்லுநரான பிரஷாந்த் கிஷோர் சென்றதாக ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23,45224 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23,452

டெல்லி விமான நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என விமானப் போக்குவர அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தாம் சரக்கு விமானத்தில் பயணித்ததாக வெளியான செய்திகளை பிரஷாந்த் கிஷோர் மறுத்திருக்கிறார்.

English summary
Now the Centre is probing on the election strategist Prashant Kishor's cargo flight travel from Delhi to Kolkata during lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X