டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாச்சலில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள்.. சீன ராணுவத்திடம் இருந்து வந்த நல்ல செய்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து இளைஞர்கள் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன மக்கள் விடுதலை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தின் உயர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சீன-இந்திய எல்லையில் இருந்து இந்த ஐந்து இளைஞர்கள் வெள்ளிக்கிழமை காணாமல் போனார்கள்.

வழிதவறி சென்றவர்களை 5 இந்தியர்களையும் சீன ராணுவம் கடத்தி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என ஐந்து பேர் காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்டனர்.

ஒரு பக்கம் ஷூட்டிங்.. படைகள் குவிப்பு.. இன்னொரு பக்கம் முப்படை தளபதிகள் அவசர மீட்டிங்.. பதற்றம்! ஒரு பக்கம் ஷூட்டிங்.. படைகள் குவிப்பு.. இன்னொரு பக்கம் முப்படை தளபதிகள் அவசர மீட்டிங்.. பதற்றம்!

கைது செய்வது இயல்பு

கைது செய்வது இயல்பு

பொதுவாக சீன ராணுவம் காடுகளில் வேட்டைக்குச் செல்லும் மக்கள் கணிக்க முடியாத நிலையில் எல்லையைக் கடந்து செல்லும் போது அவர்களை கைது செய்து அழைத்து சென்றுவிடுவார்கள். அதன்பின்னர் அவர்களை சீன விடுவித்து வருவது சகஜமான ஒன்று என்று கூறப்படுகிறது.

 ராணுவத்துக்கு தெரியாது

ராணுவத்துக்கு தெரியாது

இந்நிலையில் இந்த முறை காணாமல் போன 5 பேர் குறித்து எல்லை ராணுவ அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. 5 பேர் காணாமல் போன நாச்சோ என்ற கிராமத்தில் 400 பேர்தான் வசிக்கின்றனர் இப்படி கடந்த மாதம் கடத்திய ஒருவரை பிற்பாடு பேச்சுவார்த்தைக்குப்பிறகு சீன ராணுவம் விடுவித்தது.

ஹாட் லைன் மெசேஜ்

ஹாட் லைன் மெசேஜ்

எனவே ஐந்து பேர் கடத்தப்பட்டது குறித்து அறிய சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவ ஹாட்லைன் செய்தியை அனுப்பியுள்ளது. அதன் பதிலுக்காக சீனா காத்திருந்தது. இந்நிலையில் இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (சீன ராணுவம்) பதிலளித்துள்ளது.

உறுதிப்படுத்தியது சீனா

உறுதிப்படுத்தியது சீனா

அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து இளைஞர்களை எங்கள் பகுதியில் கண்டுபிடித்துள்ளோம். அவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறோம் என சீன மக்கள் விடுதலை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.,

English summary
The five youths had gone missing on Friday from the Sino-Indian border in the Upper Subansiri district of Arunachal Pradesh. China's PLA confirms 5 missing Arunachal youths found
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X