டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அனல் பறக்கிறது பிரச்சாரம்.. கூகுள் தளங்களில் தேர்தல் விளம்பரம்… பாஜக முதலிடம்

Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் தளத்தில் அதிக தேர்தல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. 6-வது இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என நாளிதழ், தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகள் விளம்பரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், காலமாற்றத்திற்கு ஏற்ப, இளைய தலைமுறையினரை கவரும் விதமாக, இணையதளத்தில் அதிக விளம்பரங்களை அரசியல் கட்சிகள் கொடுத்து வருகின்றன.

பானையா.. இலையா.. யாருக்கு கிடைக்கும் வெற்றி.. கணிக்கவே முடியாத இடியாப்ப சிக்கலில் சிதம்பரம் பானையா.. இலையா.. யாருக்கு கிடைக்கும் வெற்றி.. கணிக்கவே முடியாத இடியாப்ப சிக்கலில் சிதம்பரம்

பாஜக முதலிடம்

பாஜக முதலிடம்

கூகுள் தளங்களில் அதிக தேர்தல் விளம்பரங்கள் செய்த கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க. முதலிடம் பிடித்துள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை கூகுளில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவுக்கு 831 தேர்தல் விளம்பரங்களை அரசியல் கட்சிகள் செய்துள்ளன.

6-வது இடத்தில் காங்கிரஸ்

6-வது இடத்தில் காங்கிரஸ்

இதில் பாஜக, 554 விளம்பரங்கள் செய்து ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக கூகுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கூகுளில் செய்யப்பட்ட மொத்த தேர்தல் விளம்பரங்களில் 32 சதவீதம் ஆகும். காங்கிரஸ் இப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அக்கட்சி வெறும் 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு 14 விளம்பரங்களை கூகுளில் வெளியிட்டுள்ளது.

அதிக விளம்பரம்

அதிக விளம்பரம்

கூகுளில் அதிக விளம்பரம் செய்த கட்சிகள் பட்டியலில் 107 விளம்பரங்களுக்கு ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3-வது இடத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளது.

4 நிறுவனங்களுக்கு தடை

4 நிறுவனங்களுக்கு தடை

கூகுள் விளம்பர கொள்கைகளை மீறியதாக 11 அரசியல் விளம்பர நிறுவனங்களில் 4 நிறுவனங்களை கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளது. தற்போது அதிமுக கூட்டணி கட்சிகளின் விளம்பரங்கள் கூகுள் தளங்களில் அதிகம் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP has topped the list of Most Election advertising on Google sites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X