டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2022 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியை.. குறைத்த சர்வதேச நிதியம்.. ஓ இது தான் காரணமா

Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பு 2022 நிதியாண்டில் இந்தியா மிகவும் வலுவான வளர்ச்சியை அடையும் என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா, தொடங்கி உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கடந்த 2020 கடுமையாகச் சரிந்தது.

வால்பாறை சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு - 5 பேருக்கு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம் வால்பாறை சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு - 5 பேருக்கு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம்

கொரோனா வேக்சின் உள்ளிட்ட பலகட்ட நடவடிக்கைக்குப் பின்னரே உலகம் மெல் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் சர்வதேச நிதியம் 2022ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி

நடப்பு 2022 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி "மிகவும் வலுவானதாக" 8.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது சீனாவின் 4.4 சதவீத வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகம் ஆகும். இதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது. 2021இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் எனச் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

உக்ரைன் போர் காரணமாக எரிசக்தி மற்றும் உணவு விலை உயர்ந்துள்ளது இந்தியாவின் 2023 வளர்ச்சி குறைய முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி 8.2%ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், இது முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் 0.8% குறைவாகும். அதேபோல ஜப்பான் பொருளாதாரமும் 0.9 சதவிகிதம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது உள்நாட்டில் தேவை குறைந்து இருப்பதும், மக்களின் நுகர்வு குறைந்துள்ளதுமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

 சர்வதேச பொருளாதார வளர்ச்சி

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

நடப்பு 2022ஆம் ஆண்டிலும், அடுத்த 2023ஆம் ஆண்டிலும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 பொருளாதார வளர்ச்சியான 6.1 சதவீதத்தை விடக் குறைவாகும். உக்ரைன் நாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போரே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

கடந்த 2021இல் 8.1 சதவீதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2022ல் 4.4 சதவீதமாகவும், 2023ல் 5.1 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல 2021இல் 5.7% வளர்ச்சியைக் கண்ட அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2022இல் 3.7 சதவீதமாகவும் 2023இல் 2.3%ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 ரஷ்யா மற்றும் உக்ரைன்

ரஷ்யா மற்றும் உக்ரைன்

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் வரும் 2022ஆம் ஆண்டு மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது. போரால் ஏற்பட்ட இழப்புகள், படையெடுப்பு, உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல உலக நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

English summary
International Monetary Fund projected a fairly robust growth of 8.2 per cent for India in 2022: (நடப்பு 2022 ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்) India will be the fastest-growing major economy in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X