ஆப்டிகல் இல்யூஷன்: இந்த படத்தில் 12 "பாண்டா கரடிகள்" இருக்கு.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்தான்!
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் மொத்தம் 12 பாண்டா கரடிகள் இருக்கிறது. உங்களால் அந்த 12 பாண்டா கரடிகளையும் கண்டுபிடிக்க முடிந்தால் ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்போதும் இணையத்தில் அதிகம் ரசிக்கப்படுபவையாக உள்ளது.
நமது மூளைக்கு வேலை கொடுத்து நம்மை புத்துணர்ச்சியாக்கும் விதமான இத்தகைய இல்யூஷன் படங்கள் இப்போதெல்லாம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படும் ஒன்றாக உள்ளது.

இல்யூஷன் படங்கள்
சாதாரணமாக பார்த்தால் விடையை எளிதில் யூகிக்க முடியாது. மிகவும் ஆழ்ந்து கவனம் செலுத்தி உற்று நோக்கினால் மட்டுமே இத்தகைய இல்யூஷன் படங்களுக்கான விடையை நம்மால் கண்டுபிடிக்க முடியும். எளிதாக சொன்னால் இல்யூஷன் படங்களில் விடைகள் மறைந்து இருக்கும். அதை கண்டுபிடிப்பதே நமக்கு கொடுக்கப்பட்ட சவாலாக இருக்கும். இத்தகைய விடைகள் மேலோட்டமாக பார்த்துவிட்டால் கிடைத்துவிடாது.

தேர்வுகளுக்குக் கூட
சற்று ஆழ்ந்து உற்று நோக்கி படத்தை லென்ஸ் போட்டு தேடுவது போல தேடினால்தான் விடையை கண்டுபிடிக்க முடியும். இப்படி சவால் மிக்க புதிராக இல்யூஷன் படங்கள் இருப்பதால்தான் சவாலை விரும்பும் பலருக்கும் இந்த படங்கள் விருப்பமானதாக இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால் இப்போதெல்லாம் சில தேர்வுகளுக்குக் கூட இந்த இல்யூஷன் படங்களை ஒரு ஆப்ஷனாக வைக்கிறார்களாம்.

காலை வேலைகளில் நமது மனநிலையை
இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களும் போர் அடிக்கும் சமயத்தில் இல்யூஷன் படங்களை தங்கள் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு அனுப்பி விடையை போட்டி போட்டு தேடி சவால் விடுப்பதையும் காண முடிகிறது. அதுவும் காலை வேலைகளில் நமது மனநிலையை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இல்யூஷன் படங்கள் உணர வைக்கக் கூடியது என்றால் அது மிகையல்ல.

மரம் செடி கொடிகள்..
அலுவலகம் செல்வோர், பள்ளி செல்வோர் என பல தரப்பினரும் கவனிப்புத்திறனை பரிசோதித்து உற்று நோக்க வைக்கும் இத்தகைய இல்யூஷன் படங்கள், விடையை சரியாக கண்டுபிடித்துவிட்டால் ஒரு உற்சாகமான மனநிலையை தந்துவிடும். அதுபோன்ற ஒரு இல்யூஷன் படத்தை தன் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் நீர் நிலைகள், மரம் செடி கொடிகள், மலைப்பகுதிகள் என பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சி தரும் இயற்கை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

எத்தனை பாண்டாக்கள் உள்ளது
இந்தப் பகுதியில் அழகான பாண்டா கரடிகளும் இருக்கின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த பாண்டாக்கள் போல ஒவ்வொன்றும் அழகாய் அமர்ந்து இருக்கின்றன. இந்தபடத்தில் எத்தனை பாண்டாக்கள் உள்ளது என்பதுதான் உங்களுக்கான இன்றைய சவால்... என்ன சவாலுக்கு ரெடியா? அட இவ்வளவுதானா? இதெல்லாம் ஒரு மேட்டரா? என்று அசால்ட்டாக எண்ணிவிட வேண்டாம். பல பாண்டாக்கள் பல இடங்களில் மறைந்து இருக்கிறது.

சில டிப்ஸ்கள்
எனவே அதையும் மனதில் வைத்து கூர்ந்து கண்டுபிடியுங்கள்.. அதுவும் 10 செகண்டுகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது... 1,2,3.......... 10..பலரும் சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. கண்டுபிடிக்காதவர்களுக்கு சில டிப்ஸ்கள் கொடுக்கிறோம். அதை வச்சு கண்டுபிடிக்க டிரை பண்ணுங்க.. ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

பாறைகள் செடி கொடிகள் என
பாண்டா கரடி என்பதால் இதே நிறத்தில்தான் இருக்கும் என்று தேடாதீர்கள் அப்படி தேடினால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்... படத்தில் உள்ள பாறைகள் செடி கொடிகள் என அனைத்திலும் பாண்டா கரடியை தேடுங்கள்... இப்போது உங்களுக்கு ஐடியா கிடைச்சிருக்கும் என நினைக்கிறோம்.. இன்னமும் கண்டுபிடிக்காதவங்களுக்கு விடை இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டு இருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications