For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உல்லாச வாழ்க்கைக்காக தாயை கொன்ற தஷ்வந்த் - மும்பையில் சிக்கியது எப்படி? பரபர பின்னணி

சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் பணத்துக்காக தன் தாயை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த நிலையில் அவரை மும்பையில் நேற்று கைது செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    உல்லாச வாழ்க்கைக்காக தாயை கொன்ற தஷ்வந்த் - மும்பையில் சிக்கியது எப்படி?- வீடியோ

    மும்பை: சென்னையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தஷ்வந்த் பிடிபட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் விளக்கமளித்தனர்.

    போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.

    இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    தஷ்வந்த்துக்கு ஜாமீன்

    தஷ்வந்த்துக்கு ஜாமீன்

    இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.

    25 பவுன் நகைகள் கொள்ளை

    25 பவுன் நகைகள் கொள்ளை

    இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு தனது தாய் சரளாவிடம் (42) பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரளா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தஷ்வந்த் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து சரளாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து தஷ்வந்த், சரளா அணிந்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிவிட்டார்.

    தஷ்வந்த் மும்பையில் கைது

    தஷ்வந்த் மும்பையில் கைது

    இதுகுறித்து தந்தை சேகரின் புகாரின்பேரில் தஷ்வந்த்தை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து அவனை தேடி வந்தனர். அவனது நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்றது. கொள்ளையடித்த நகைகளை நண்பர்களிடம் கொடுத்து விற்பனை சொன்ன நிலையில் நண்பர்களும் சிக்கினர். இந்நிலையில் தஷ்வந்த் மும்பையில் பதுக்கியிருந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.

    ஆம்னி பஸ்ஸில் ...

    ஆம்னி பஸ்ஸில் ...

    இதுகுறித்து மூத்த அதிகாரி கூறுகையில், தாயை கொலை செய்தவுடன் அவனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். ஆரம்பத்தில் எங்களுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவனது செல்போன் கடைசியாக பாடி பகுதியில் இருந்தது தெரியவந்தது. பாடியின் பின்புறம் உள்ள ஆம்னி பஸ்ஸில் பார்த்ததாக ஒருவர் போன் செய்து தெரிவித்தார். பயணிகள் விவரங்களை சரிபார்த்தபோது அவன் தவறான செல்போனை கொடுத்திருந்தது தெரியவந்தது. அவருக்கு குதிரை பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு என்று மற்றொரு துப்பும் கிடைத்தது.

    சென்னைக்கு இன்று வருகிறார்

    சென்னைக்கு இன்று வருகிறார்

    பெங்களூர், மைசூரு, மும்பை ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை போலீஸார் அனுப்பப்பட்டனர். குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அங்கு தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் இடங்களை அலசினார். உள்ளூர் போலீஸாரும் தஷ்வந்த்தை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் பந்தயத்தை பார்வையிட சென்ற போது அவரை போலீஸார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் தஷ்வந்த் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    English summary
    Daswant was arrested in Mumbai who was charged with raping and murdering a seven-year-old girl in Mugalivakkam last February, also murdered his mother at their house near Kundrathur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X