For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதெப்படி ஒரு எம்பியை கட்சித் தலைவர் அறையலாம்? ... ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பாவின் குமுறல் பேச்சு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை அறைந்ததாக அக்கட்சியின் எம்பியான சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் புகார் கூறியிருந்தார். இதனால் அவரை உடனடியாக அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியும் உத்தரவிட்டிருந்தார்.

I Need Protection, Wept TN MP Sasikala Pushpa

ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய முழுமையான பேச்சு விவரம்:

  • இரு விஷயங்களை பேச விரும்பிகிறேன். கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன்.
  • திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர்.
  • என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் .
  • திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
  • என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.
  • ஆனால் எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன்.
  • என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.
  • இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன்.
  • என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார்.
  • என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார்.
  • என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை.
  • ஒரு தலைவர் ஒரு எம்.பி யை அறைவது என்ன விதத்தில் சரி.
  • பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில்கூட வாழமுடியவில்லை.

English summary
Will the government save me? I need protection, there is a threat to my life" - Tamil Nadu MP Sasikala Pushpa wept as she made the stunning declaration in Parliament on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X