For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவைசி மீது தாக்குதல்.. வந்தே பாரத் ரயிலுக்கு பறந்து வந்த கற்கள்! அனல் பறக்கும் குஜராத் தேர்தல் களம்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தனது கட்சி நிர்வாகிகளுடன் பயணம் மேற்கொண்ட நிலையில் அதன் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. பாஜக ஆட்சியில் இருக்கும் இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து உள்ளது அக்கட்சித் தலைமை.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கவும், கடந்த முறையை விட இம்முறை கூடுதல் தொகுதிகளை கைப்பற்றவும் தற்போது தீவிரம் காட்சி வருகிறது பாஜக.

ஹேய்.. அதுக்குன்னு இப்படியா.. ஓடும் ரயிலில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. மிரண்டு போன பயணிகள்..!!ஹேய்.. அதுக்குன்னு இப்படியா.. ஓடும் ரயிலில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. மிரண்டு போன பயணிகள்..!!

 கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

2 கட்டங்களாக நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போது வெளியான கருத்துக்கணிப்புகளின் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டு உள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சி

ஏஐஎம்ஐஎம் கட்சி

இந்த தேர்தலில் ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தனித்து போட்டி இடுகிறது. இஸ்லாமியர்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 30 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வந்தே பாரத் ரயில் பயணம்

வந்தே பாரத் ரயில் பயணம்

இந்த நிலையில் குஜராத்துக்கு சென்ற அசதுத்தீன் ஒவைசி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒவைசி பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் இருந்து சூரத் நோக்கி ஒவைசி வந்தே பாரத் ரயிலில் புறப்பட்டார்.

கல் வீச்சு

கல் வீச்சு

ரயிலில் ஏறி புறப்பட்டு சூரத்துக்கு சென்றடைவதற்கு 25 கிலோ மீட்டருக்கு முன்பாக அசதுத்தீன் ஒவைசி கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்த ரயில் பெட்டி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. ஒவைசி அமர்ந்திருந்த ரயில் பெட்டியை நோக்கி கற்களை கொண்டு மர்ம நபர்கள் வீசியதாக கூறப்படுகிறது.

உடைந்த கண்ணாடி

உடைந்த கண்ணாடி

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வாரிஸ் பதான் தெரிவிக்கையில், "குஜராத் மாநில ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் சபிர் கப்லிவாலா, அசதுத்தீன் ஒவைசியுடன் ரயிலில் செல்லும்போது தாக்கப்பட்டோம். மர்ம நபர்கள் வீசிய கற்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்ணாடி உடைந்தது." என்று கூறி இருக்கிறார்.

2 கற்கள்

2 கற்கள்

இதனை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வாரிஸ் பதான், "ஒவைசி ரயில் பெட்டிக்குள் அமர்ந்து இருக்கும்போது 2 கற்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. மர்ம நபர்கள் அதை வீசி சென்றார்கள். நீங்கள் எங்கள் மீது கற்களை வீசினாலும், நெருப்பு மழை பொழிந்தாலும் உரிமைக்கான எங்கள் குரலை ஒருபோதும் நிறுத்தமாட்டோம்." என்றார்.

English summary
AIMIM party leader and Hyderabad MP Asaduddin Owaisi attacked by stone pelters in Gujarat Vande Bharat train
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X