For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன் ஒன்று இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த டிரோன் குறித்த முக்கிய தகவல்கள் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு எப்படி நிலைமை மோசமாக இருக்கிறதோ அதேபோல் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் இப்படி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பாகிஸ்தான் ராணுவமும், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் அங்கு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!

பாகிஸ்தான் டிரோன்

பாகிஸ்தான் டிரோன்

இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன் ஒன்று இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த டிரோன் குறித்த முக்கிய தகவல்கள் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்று இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி டிரோன் உள்ளே வந்துள்ளது.

சுட்டு வீழ்த்தினார்கள்

சுட்டு வீழ்த்தினார்கள்

இந்த டிரோனை பார்த்ததும் அதை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம் 4 துப்பாக்கிகளை பயன்படுத்தி அதை உடனே அதிரடியாக சுட்டு வீழ்த்தினார்கள். இரண்டு சுற்று குண்டுகளை வைத்து உடனே டிரோனை சுட்டு வீழ்த்தி அதை மீட்டார்கள். பாகிஸ்தான் ராணுவம் மூலம் இந்த டிரோன் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்ப இப்படி செய்துள்ளனர். இந்த டிரோனில் நிறைய ஆயுதங்கள் வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதில் அலிபாய் என்று எழுதப்பட்டு இருந்தது. அலிபாய் என்று தீவிரவாதிக்கு அனுப்பப்பட்ட பார்சலாக இது இருக்கும் என்று கூறுகிறார்கள். மொத்தம் 8 அடி நீளம் கொண்ட டிரோன் ஆகும் இது.

எல்லைக்குள் வந்தது

எல்லைக்குள் வந்தது

இந்திய எல்லைக்குள் 500 மீட்டர் வரை இது வந்துள்ளது. உடனடியாக அதை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் பல நாட்களாக இப்படிப்பட்ட டிரோன் பார்சல் முறையை பயன்படுத்தி வருகிறது. காஷ்மீருக்குள் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் இப்படி செய்கிறது. இதனால் தற்போது எல்லையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Pakistan violated in Kashmir: Sends drone parcel for a terrorist in Kashmir today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X