லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்ணீர் வடிக்கும் கங்கை.. மிதக்கும் உடல்கள்.. புதைக்கப்படும் சடலங்கள்.. மயான பூமியான கரையோரங்கள்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரம் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    Bihar-ல் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய ஏராளமான சடலங்கள்.. Corona உயிரிழப்புகளா என விசாரணை

    பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா வீரியம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி.. ரேஷனில் கிடைக்க போகும் அடுத்த ஜாக்பாட்.. அரசு அதிரடி தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி.. ரேஷனில் கிடைக்க போகும் அடுத்த ஜாக்பாட்.. அரசு அதிரடி

    மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று உள்ளூர் பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே அரசை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

    கங்கைக்கு வந்த சோதனை

    கங்கைக்கு வந்த சோதனை

    இது தவிர உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியாம் கங்கையில் தொடர்ந்து மிதந்து வரும் உடல்கள் மக்களிடம் அச்சத்தை கூட்டியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பாயும் கங்கை ஆற்று பகுதியில் சமீபத்தில் 45 உடல்கள் மிதந்தன. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்குமோ? இதன் மூலம் நோய் மேலும் பரவுமோ? என்ற பீதி அனைவரையும் பிடித்துள்ளது.

    மயான பூமியான கங்கை

    மயான பூமியான கங்கை

    இந்த நிலையில் கங்கையில் தொடர்ந்து உடல்கள் மிதந்து வருவதால் உத்தர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரங்கள் மயான பூமியாக மாறி வருகின்றன. உள்ளூர்வாசிகள் கரை ஒதுங்கி வரும் உடல்களையும், அங்கு உயிரிழப்பவர்களின் உடல்களையும் கரைகளில் புதைத்து வருகின்றனர். உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரம் காணும் இடமெல்லாம் உடல்கள் புதைக்கப்பட்ட மேடாக காட்சியளிக்கிறது.

    உடல்கள் புதைப்பு

    உடல்கள் புதைப்பு

    இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்தில் ஆழமான குழிகளை தோண்டி புதைத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், ' எனக்கு தகவல் கிடைத்ததும், நான் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுள்ளேன், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

    கொரோனா நோயாளிகளா?

    கொரோனா நோயாளிகளா?

    பொதுவாக இந்து முறைப்படி உடல்களை எரிப்பது வழக்கம். ஆனால் எரிப்பதற்கு தேவையான விறகுகள் பற்றாக்குறை காரணமாக உடல்களை புதைத்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு புதைக்கப்பட்ட பல உடல்கள் அருகிலுள்ள கிராமங்களில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளா என்று கேட்டபோது, ​​''இதுவரை இவர்கள் கொரோனாவால் இறந்தவர்களா? என்பது தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    English summary
    Numerous bodies are being buried along the Ganges in Unnao district of Uttar Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X