மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென உடைந்துபோன நடைமேம்பாலம்.. 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த 20 பயணிகள்.. ஷாக்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் திடீரென்று நடை மேம்பாலத்தின் இருந்த சிலாப்புகள் இடிந்து விழுந்த நிலையில் 60 அடி உயரத்தில் இருந்து ரயில்வே பயணிகள் அந்தரத்தில் பறந்து வந்து தண்டவாளத்தில் விழுந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபுரா அருகே உள்ள பல்லர்ஷா எனும் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் 5 பிளாட்பாரத்தை கொண்டுள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காகத ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலங்கள் தண்டவாள பாதைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளன.

 புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்!

உடைந்த நடை மேம்பாலம்

உடைந்த நடை மேம்பாலம்

இதன்மூலம் பொதுமக்கள் விபத்தில் சிக்காமல் எளிமையாக தாங்கள் செல்ல வேண்டிய பிளாட்பாரம்களுக்கு நடந்து சென்று வருகின்றனர்.இந்நிலையில் தான் இன்று மாலை 5.30 மணியளவில் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் வழக்கம்போல் பயணிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில்வே நடைமேம்பாலத்தின் அடிப்பகுதி பயங்கரமான சத்தத்துடன் உடைந்து விழுந்தது.

தண்டவாளத்தில் விழுந்த பயணிகள்

தண்டவாளத்தில் விழுந்த பயணிகள்

அதாவது நடை மேம்பாலத்தில் இருந்த சிலாப்புகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் அதில் நடந்து சென்று கொண்டிருந்த 20 பயணிகள் நடை மேம்பாலத்தில் இருந்து கண் இமைக்கும் நொடியில் அந்தரத்தில் பறந்து வந்து கீழே செல்லும் தண்டவாளத்தில் விழுந்தனர். தண்டவாளத்தில் இருந்து இந்த ரயில்வே மேம்பாலம் சுமார் 60 அடி உயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த பயணிகள் படுகாயமடைந்து அலறி துடித்து உயிருக்கு போராடினார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அதிகாரிகள் உடனடியாக வந்து 20 பேரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நடை மேம்பாலம் எப்படி திடீரென்று இடிந்து விழுந்தது என்பது தெரியவில்லை. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

பெரும் விபத்து தவிர்ப்பு

இந்த விபத்தின்போது பயணிகள் நடை மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தில் ரயில்கள் எதுவும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தையும் நிவாரணமாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

English summary
In Maharashtra, a railway passenger flew from a height of 60 feet and fell on the tracks when the sleepers of the footbridge suddenly collapsed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X