For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றால், அது ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் அடைந்த தோல்வியாகும்.

பல இடங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்களின் மகன்கள், மருமகள்கள் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளனர்.

அதற்கு உதாரணமாக அன்வர் ராஜா மகன், மகள், சந்திர சேகர் எம்.எல்.ஏ. மகன், பரமேஸ்வரி எம்.எல்.ஏ.வின் கணவர் எனக் கூறிக்கொண்டே போகலாம்.

அதை விடுங்க.. காங்கிரஸை பாருங்க.. இந்த பக்கம் பாஜகவை தூக்கி அடிச்சு கலக்கிட்டிருக்கு! அதை விடுங்க.. காங்கிரஸை பாருங்க.. இந்த பக்கம் பாஜகவை தூக்கி அடிச்சு கலக்கிட்டிருக்கு!

வாரிசுகள் போட்டி

வாரிசுகள் போட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் உறவினர்கள், வாரிசுகள் என பலரும் ஆர்வமுடன் போட்டியிட்டனர். ஆளுங்கட்சி என்பதால் அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த அவர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

கொதிப்பு

கொதிப்பு

அதிமுகவில் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட பதவிகளை வகித்த அன்வர் ராஜாவின் மகன், மகள் ஆகிய இருவரும் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளனர். அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி 16 வது வார்டிலும், மகள் ராவியத்துல் ஹதவியா 2 வது வார்டிலும் போட்டியிட்டு சுமார் 1,000 ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 1400 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இதேபோல் நாமக்கல் மாவட்டம் நடுக்கோம்பை ஊராட்சியில் போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரின் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார். அவரது தந்தை சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் கூட மக்கள் யுவராஜுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர். இது ஆளுந்தரப்பு மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடாக தெரிகிறது.

எடுபடவில்லை

எடுபடவில்லை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் கணவர் முருகன் படுதோல்வி அடைந்துள்ளார். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரை மக்கள் சீண்டவில்லை. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீதர் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்கள்: மாவட்ட கவுன்சில்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றிஉள்ளாட்சி தேர்தல்கள்: மாவட்ட கவுன்சில்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மகன், கணவன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்றால், அந்த எம்.எல்.ஏ.க்கள் எந்தளவிற்கு தொகுதிக்கு பணி செய்திருக்கிறார்கள் என்பதை அதிமுக தலைமை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
The heirs of the ruling party figures lost the election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X