For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்த் சந்த்நிசே ஹோத்தா ஹை.. அதாவது அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கிறோம்பா!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: இந்தி பேசுவதில் என்னப்பா தப்பு என்றுதான் தேசிய பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் திருவண்ணாமலை மாவட்ட பாஜக கட்சியினர் அதை பாட்டாகவே பாடி விட்டனர்.

அதாவது அமித் ஷாவை வரவேற்று மாவட்ட பாக பொருளாதப் பிரிவு தலைவர் பி. ராஜேந்திரகுமார் என்பவர் தினசரி ஒன்றில் பிரசுரித்துள்ள விளம்பர வாசகம்தான் "டாப் ஆப் தி டெம்பிள் டவுன்" ஆக மாறியுள்ளது.

Thiruvannamalai dt BJP welcomes Amit Shah in Hindi

தமிழகத்தின் நம்பர் ஒன் தமிழ் நாளிதழ் அது. அந்த தினசரியில்தான இந்த இந்தி விளம்பரம். வரவேற்பு வாசகத்தை ஆங்கிலம் வழியாக இந்தியில் போட்டுள்ளனர்.

அந்த வாசகம் இதுதான் - சந்த் சந்த்னிசே ஹோத்தா ஹை சிதாரன் சே நஹி.. ஏக் ஹோத்தே ஹெய்ன் ஹஜரான் நஹி.. (இதன் அர்த்தம் என்னவென்றால், நிலவிலிருந்து தான் வெளிச்சம் வருகிறது, நட்சத்திரங்களிலிருந்து அல்ல... )

விளம்பரத்தில் மோடி, வாஜ்பாய், அத்வானி, எச்ராஜா, பொன்னார், தமிழிசை என ஏகப்பட்ட பேரின் படங்கள் வரிசை கட்டி இடம் பெற்றுள்ளன. திடீர்னு பார்த்தால், ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் பட போஸ்டர் மாதிரியே தோன்றுகிறது.!

ஆனாலும் அதில் ஒன்றைக் கவனித்தீர்களா.. என்னதான் இவர்கள் இந்தியைத் திணித்தாலும், அதை நேரடியாக செய்ய முடியவில்லை பாருங்க, ஆங்கிலத்தின் வழியாகத்தான் "திணிக்க" முடிகிறது என்பதுதான் இதில் ஹைலைட்!

இன்னொரு முக்கியமான விஷயம்: இந்த சந்த் சந்தனிசே என்பது ஏதோ பாஜகவினரே உட்கார்ந்து கஷ்டப்பட்டு எழுதிய வரிகள் என்று நினைத்து விடாதீர்கள். இது கிஷோர் குமார் அந்தக் காலத்தில் பாடிய ஒரு ஹிட் இந்தி சினிமாப் பாட்டின் முதல் இரு வரிகள்!!

நமக்கு இன்னொரு சந்தேகமும் (தேவையில்லாமல்) வந்து போகிறது. இதில் "ஸ்டார்" என்று யாரை குறிப்பிடுகின்றனர் பாஜகவினர் என்பதுதான் அந்த சந்தேகம்!!

English summary
Thiruvannamalai district BJP has welcomed its national leader Amit Shah in Hindi in the advertisement given in Tamil news papers. They have used Hindi movie song lines to welcome Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X