காதலனோடு புது மகிழ்ச்சியை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது தன்னுடைய காதலனோடு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
18 வருடங்களுக்குப் பிறகு அவருடைய ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னத்திரையில் பிரியா
பொதுவாக பல நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து தான் அங்கே தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க இல்லை என சின்னத்திரையை நோக்கி படை எடுப்பர் ஆனால் ஒரு சில நடிகைகள் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று அங்கே வெற்றி காண்கின்றனர். அந்த வரிசையில் பவானி சங்கர் இருந்து வருகிறார் .விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் ரசிகர்களால் செல்லமாக பிரியா எனவே அழைக்கப்படும் இவர் வெள்ளி திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பீல் பண்ணும் இளைஞர்கள்
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் பிரியா பவானி சங்கர் இளைஞர்களின் கனவு கன்னி என்று பலர் கொண்டாடி வருகின்றனர். பலருடைய ப்ரொபைலில் போட்டோவையாக இவருடைய புகைப்படம் தான் இடம் பிடித்து இருக்கிறது. அந்த வகையில் பிரியா பவானி சங்கர் தற்போது வெளியிட்ட புகைப்படம் பல இளைஞர்களின் மனதை கிழித்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வாழ்த்துக்களை மட்டும் குவித்து வருகிறார்கள்.

புது வீடும் வாழ்த்துக்களும்
பிரியா பவானி சங்கர் அவருடைய காதலன் ராஜவேல் என்பவரோடு கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தாங்கள் 18 வருடங்களாக கடற்கரை பக்கத்தில் பார்த்து ரசித்த ஒரு இடத்தில் புது வீடு கட்டி இருக்கிறோம். இனி அங்கே இருந்து நிலவையும் கடலையும் ரசிக்கப் போகிறோம் என பதிவிட்டிருக்கிறார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொகுப்பாளராக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன், சமீபத்தில் திருமணம் முடிந்த மஞ்சிமா மோகன் உட்பட பல நடிகைகளும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பொறாமையில் பொங்கும் நெட்டிசன்கள்
தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி அதற்குப் பிறகு ஒரே சீரியலில் நடித்துவிட்டு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்து, எங்க வீட்டு குத்துவிளக்கு நீ கெடைச்சா வாழ்க்கையே கெத்து என்று சொல்லும் வகையில் இளைஞர்களின் மனதை அள்ளி விட்டு, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலமாக பூம்பொழில் செல்லமா கேரக்டரால் ரசிகர்களின் மனதை அள்ளிவிட்டு, குருதி ஆட்டம், மான்ஸ்டர், மாபியா, திருச்சிற்றம்பழம் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னுடைய புன் சிரிப்பாலே கவர்ந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் நெட்டிசன்கள் பலர் அவருடைய காதலனை குறித்து பொறாமையில் பொங்குகின்றனர்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications