விஜய் உடன் பேச வாய்ப்பு கிடைத்தால்.. இதுதான்.. அமீர் வெளிக்காட்டிய புது ஆசை
சென்னை: அமீர் தன்னிடம் விஜய் பற்றி கேள்வி கேட்ட ரசிகருக்கு அசத்தலான பதிலை கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜய்யின் திரைப்படத்தில் தான் டான்ஸ் மாஸ்டராக இருந்திருந்தாலும், அவரிடம் நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தால் இதைத் தான் பேசுவேன் என்று தன்னுடைய ஆசையை கூறியுள்ளார்.

ரசிகர்களின் கேள்விகள்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அமீர் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவரிடம் பல ரசிகர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில ரசிகர்கள் இவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ள பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இவருடைய ஆசை மற்றும் கனவு லட்சியங்களை பற்றியும் கேட்டுத் தெரிந்து உள்ளனர்.

விஜய்யின் தரிசனம்
அந்தவகையில் ஒரு ரசிகர் திடீரென்று உங்களுக்கு விஜய்யை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்கனவே நான் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை கடந்து விஜய் சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்து இருக்கிறேன் ஜம்மென்று ஒரு ஹீரோ நம்மை கடந்து செல்லும்போது ஆட்டோமேட்டிக்காக கண் அவரையே பார்த்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அமீரின் ஆசை
அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் விஜய்யின் ஒரு திரைப்படத்தில் நான் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்குமா? ? என்று கேட்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் டான்ஸில் சிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவருடைய பல விதமான டான்ஸ் மாடல்களை ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்கள் பார்த்து தெரிந்து இருப்பார்கள். அவருக்கு எல்லா விதமான டான்ஸ்களும் அத்துப்படியாக இருந்தாலும், அவருடைய தனித் திறமையை வெளிக்காட்டும் விதமாக நான் அவருக்கு ஸ்பெஷலாக டான்ஸ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார்.

இது தனி அன்பு தான்
ஏற்கனவே டோலு டோலு எனும் பாடலுக்கு விஜய் ஒரு தனித்துவமான ஸ்டெப் போட்டு ஆடியிருப்பார். அந்த மாதிரி டான்ஸ் எந்த பாடலிலும் அவர் வெளிக்காட்டவில்லையாம். அதுபோலத்தான் நான் சொல்லிக் கொடுக்கும் டான்ஸ் அவருக்கு வித்தியாசமாகவும் அவருடைய தனித் திறமையை வெளிக்காட்டும் இடமாகவும் இருக்க வேண்டும் என்றும் விஜய் மீதிருக்கும் தன்னுடைய அன்பை வெளிக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு விஜய் நடித்த திரைப்படங்களில் 90ஸ் பேவரைட் படங்கள்தான் அதிகமாக பிடிக்குமாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications