இவ்வளவு நாளா ஆட்டம் போட்ட கோபிக்கு ராதிகா வீட்டில் கிடைத்த ஆப்பு.. முதல் நாளிலே இப்படியா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு ராதிகாவுடன் திருமணம் முடிந்த முதல் நாளிலே ராதிகாவின் வீட்டில் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
இத்தனை நாட்களாக கோபி தன்னுடைய வீட்டில் அனைவரையும் அதட்டி உருட்டி வைத்திருந்தவருக்கு இந்த நிலைமையா என்று பார்ப்பவர்களே பரிதாபப்படும் வகையில் இருந்து வருகிறது.

ராதிகாவின் செயல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டில் மண்டபத்தை விட்டு கிளம்பும்போது ராதிகா பாக்கியாவை பார்த்ததும் கோபியின் கையை இறுக்கமாக பிடித்து பாக்கியாவை முறைக்கிறார். பாக்யாவும் இதை பார்த்தாலும் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டு பாவமாய் நின்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் பார்வையையும் கோபி பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் ராதிகாவோடு நடையை கட்டி வீட்டிற்கு சென்று விடுகிறார். ராதிகாவின் வீட்டிற்கு வந்ததும் வாசலில் ராதிகாவின் அம்மா கோபியையும் ராதிகாவையும் நிற்க வைத்து இருக்கிறார்.

வாசலில் கிடைத்த வரவேற்பு
மாப்பிள்ளை கெட்டப்பில் கோபியும் மணப்பெண்ணாக ராதிகாவும் இருப்பதை பார்த்த ராதிகாவின் அக்கம் பக்கத்தில் வீட்டினர் இவர் அடிக்கடி இங்கு வந்து போவாரே அவர் தானே? இவர்கள் திருமணம் செய்து விட்டார்கள் போல என்று கூடி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து அதிர்ச்சியுடன் கோபி முழித்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதன்று தெரியாமல் கோபி நிற்பதை பார்த்த ராதிகாவின் அம்மா, இங்கே நில்லுங்கள் அப்பொழுது தான் நீங்க இங்கே வந்து போனாலும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. கல்யாணம் முடிந்தது எல்லோருக்கும் தெரியட்டும் என்று கூறுகிறார்.

தனியாய் தவிப்பு
திருமணமான முதல் நாளே மாமியாரின் பேச்சுக்கு பூம்பூம் மாடு போல கோபி தலையை ஆட்டிக்கொண்டு நிற்கிறார். பின்பு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள்ளே கூப்பிட்டு செல்கிறார்கள். ராதிகா, கோபி, மயூ மூவரும் ஒரே சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். பாலும் பழமும் சாப்பிட்டு செல்பி எடுத்த பிறகு ராதிகா அவ்வளவுதானே? முடிந்தாதா நான் இனி என் ரூமுக்கு போகிறேன் என்று கிளம்பி விடுகிறார். அவரை தொடர்ந்து மயூ கிளம்புகிறார். அப்படியே அனைவரும் கிளம்பி விடுகிறார்கள். கோபி மட்டும் அந்த அறையில் தனியாக அமர்ந்திருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோடு.

இவ்வளவு சீக்கிரம் நடந்து விட்டது
முதல் நாளில் கோபி இப்படி அமைதியாக தனியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாட்களாக கோபியின் வீட்டில் அனைவரையும் அதட்டி மிரட்டி கொண்டிருந்தார். ஆனால் தற்போது இவருடைய பேச்சைக் கேட்க கூட யாரும் அருகில் இல்லாமல் இருக்கிறார். இனிதான் 2 பொண்டாட்டி காரரின் அவஸ்தை தெரிய போகிறது. அது மட்டுமில்லாமல் கோபியின் அம்மா இவருக்கு சாபம் கொடுத்தது போல நடந்து விடும் போலையே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் போகப் போகத்தான் பாக்யாவின் அருமை கோபிக்கு நன்றாக தெரியும் என்று சிலர் தங்களுடைய கோபங்களை கமெண்ட்களில் கொட்டுகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications