Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர் கொடுத்த சங்கீதா போட்டோ, பார்த்ததும் விஜய் செய்த செயல்.. இது விஜயகாந்துக்காக நடந்த மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், விஜய் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விஜய் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Vijayakanth tvk

ரசிகர் கொடுத்த புகைப்படம்

பிரச்சார கூட்டத்தின் போது, ரசிகர் ஒருவர் விஜய்க்கு ஒரு புகைப்படத்தை காட்டியுள்ளார். அந்த புகைப்படத்தில், விஜய் தனது மனைவியுடன் சேர்ந்து மறைந்த நடிகர் விஜயகாந்த் உடன் இருக்கும் காட்சிகள் இருந்தது.

அந்த புகைப்படத்தை கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் தூக்கி காட்டியதும், அதை கவனித்த விஜய் உடனே அதை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். புகைப்படம் அவரிடம் வந்ததும், ஒரு கணம் அவர் முகபாவனையில் மாற்றம் ஏற்பட்டதாக வீடியோவில் தெரிகிறது.

பின்னர் அந்த புகைப்படத்தை கூட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு காட்டிவிட்டு, தன்னுடைய கண்ணாடியை சற்றே தூக்கி மீண்டும் அந்த போட்டோவை பார்த்து இருக்கிறார். பிறகு தன்னுடைய பாதுகாவலர்களிடம் அந்த போட்டோவை கொடுத்து இருக்கிறார். இந்த சில விநாடி ரியாக்ஷனே தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குடும்ப விவகாரம்

இதற்கு பின்னணி காரணமாக, கடந்த மாதம் முதல் விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டது.

இதுகுறித்து விஜய் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசியபோது, "என்னுடைய குடும்ப விஷயங்கள் வொர்த்தே இல்ல அதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக பதிலளித்திருந்தார். ஆனால் அந்த கருத்தும் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.

விசாரணை தேதிகள் குறித்து பரவும் தகவல்கள்

இந்நிலையில், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்ற தகவலும் பரவி வருகிறது. அதற்கடுத்த நாளான ஏப்ரல் 21ஆம் தேதி, சங்கீதா தரப்பில் சில முக்கிய ஆதாரங்கள் வெளியிடப்படலாம் என்றும், செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஆனால், இந்த தகவல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலான வீடியோ

இந்த நிலையில், பிரச்சார மேடையில் நடந்த அந்த புகைப்பட சம்பவம், இந்த குடும்ப சர்ச்சைகளுடன் இணைத்து பேசப்படுகிறது. சிலர், "அந்த புகைப்படம் பழைய நினைவுகளை கிளப்பியிருக்கலாம்" என்று கூற, மற்றவர்கள் "அது சாதாரண ரியாக்ஷன் தான்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் பிரச்சாரம் ஒரு பக்கம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் இன்னொரு பக்கம் என்ற இரட்டை அழுத்தத்தில் விஜய் தற்போது இருக்கிறார். இந்த சூழலில், ஒரு சாதாரண ரசிகர் கொடுத்த புகைப்படம் கூட பெரிய விவாதமாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+