கணவர் கைவிட்டாலும், கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யாவிற்கு சீரியல் நடிகைகள் கொடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னதிரை நடிகையான திவ்யா ஸ்ரீதருக்காக அவருடைய சீரியலில் நடிக்கும் நடிகைகள் நெகிழ்ச்சியான செயலை செய்து இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடல் கணவரை பிரிந்து இருக்கும் திவ்யா ஸ்ரீதருக்கு தற்போது ஐந்தாவது மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் அவருக்காக வளைகாப்பு பங்க்ஷன் கொண்டாடி வாழ்த்துக்களை குவித்திருக்கின்றனர்.

முதல் சீரியலும் காதலும்

முதல் சீரியலும் காதலும்

கன்னட நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே ஏற்கனவே இவர் கேளடி கண்மணி, மகராசி போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் முதல் முதலில் அறிமுகமான கேளடி கண்மணி சீரியலில் இவருடன் நடித்த நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இந்த சீரியல் நடிக்கும் போதே காதலித்து இருந்தாலும் சுமார் ஐந்து வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்திருக்கிறார்கள்.

குழந்தையின் பரிசம்

குழந்தையின் பரிசம்

சமீபத்தில் தனக்கு அர்ணவ் உடன் திருமணம் முடிந்த செய்தியை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் திவ்யா பதிவிட்டதும், இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட தொடங்கி இருக்கின்றது. திவ்யா அர்ணவுக்காக மதம் மாறி திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி ரசிகர்களோடு பகிர்ந்து வருவார். சமீபத்தில் ஐந்தாவது மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட் போட்டோவை கூட ரசிகர்களோடு பகிர்ந்து குழந்தையின் முதல் அசைவினையை தான் அனுபவிக்கும் புது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தார்.

திடீர் சர்ப்ரைஸ்

திடீர் சர்ப்ரைஸ்

இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இவரோடு இதற்கு முன்பு சீரியல்களில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் பலர் ஒன்றாக இவருடைய வீட்டிற்கு திடீர் விசிட் கொடுத்து வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு பங்க்ஷனை முடித்து இருந்தனர். இந்த ஒரு மகிழ்ச்சியை தான் எதிர்பார்க்காதது என்று நெகிழ்ச்சியாக அனைவருக்கும் நன்றி கூறி திவ்யா பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக இருக்கும் திவ்யா சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல மோட்டிவேஷன் வீடியோக்களையும், தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அர்ணவ்வும் மோட்டிவேஷன் வீடியோக்களையும் தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

சீரியல் நண்பர்களின் எதிர்பாராத செயல்

சீரியல் நண்பர்களின் எதிர்பாராத செயல்

இவர்கள் இருவருமே சம்பந்தம் இல்லாதது போல தான் போட்டி போட்டு போட்டோக்களை வெளியிட்டு அதற்கான கேப்ஷன்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது திவ்யா புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .அதே நேரத்தில் திவ்யாவிற்கு செவ்வந்தி சீரியல் நடிகைகள் அனைவரும் சேர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் வளைகாப்பு செய்திருக்கின்றனர். செவ்வந்தி சீரியலில் கணவனை இழந்த பெண்ணாக இருக்கும் திவ்யாவிற்கு நிஜ வாழ்க்கையில் நாங்கள் இருக்கிறோம் என்று அனைத்து நடிகைகளும் வளையல் போட்டு இனிப்புகளை ஊட்டி, அறுசுவையான சாப்பாடுகளை ஊட்டி அவரை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கின்றனர். சீரியலில் இவருக்கு வில்லியாக நடிக்கும் நடிகைகள் கூட நிஜ வாழ்க்கையில் நாங்கள் அப்படி இல்லை என்று இவருடைய குழந்தை நல்ல மனநிலையில் பிறக்க வேண்டும் என்று செய்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்..அதே நேரத்தில் அவருடைய கணவர் கர்ப்பமாக இருக்கும் மனைவியை இப்படி விட்டு விட்டு இருக்கலாமா? என்று கருத்துக்களில் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+