சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 28 update) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 28ஆம் தேதி எபிசோடில் ரோகிணிக்கு விஜயாவும் மனோஜும் சேர்ந்து பெரிய தண்டனை கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ரோகிணி எதிர்பார்க்காத பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் முத்து மீனா குடும்பத்திற்குள் ஒரு புது உறவு வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும் மனோஜும் பிளான் போட்டு ரோகிணியை தன்னுடைய ஷோரூமுக்கு வர வைக்கின்றனர். ரோகிணியும் சந்தோஷமாக அங்கே வர, அங்கு விஜயா இருப்பதை பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சி ஆகிறார். என்ன ஆன்ட்டி இங்க வந்து இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? என்று நலம் விசாரிக்கிறார்.
அதற்கு விஜயா நீ என்கிட்ட எத்தனை முறை தான் நாடகம் போட்டு ஏமாத்துவ? உன்னால நான் தான் ஒவ்வொருத்தர் கிட்டயும் அசிங்கப்பட்டு இருக்கிறேன். நீ பிளான் பண்ணி மீனாவை வீட்டை விட்டு வெளியே போக வைப்பதற்காக என் தாலி பாக்கியத்திற்கு பிரச்சனை என்று போலி சாமியாரை வர வச்சிருக்க என்று சொன்னதும் ரோகிணிக்கு குழப்பம் ஆகிறது.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை
இதெல்லாம் செய்தது சிந்தாமணி தானே? ஆனால் எப்படி என் பேரு வந்து மாட்டுச்சு? என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்க, அதற்கு விஜயா நீ இன்னும் என்ன நாடகம் போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா? உனக்கு தண்டனை கொடுக்கணும் என்று சொல்லி ஏற்கனவே மனோஜ் பிரண்டை சாட்டையால் அடிக்க ஒருவரை ஒரு முறை ரோகிணி செட் செய்திருந்தாரே அதே நபரை கூட்டிக்கொண்டு வந்து ரோகிணியை அடிக்க வைக்கிறார்.
ரோகிணிக்கு விழுந்த அடி
ரோகிணி வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாலும் விஜயாவும் தடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் ரோகிணி மயங்கி கீழே விழுந்து விடுகிறார். அதனால் சாட்டை அடிக்கும் நபர் பயந்து போய் அங்கிருந்து போய் விடுகிறார். உடனே விஜயாவும் மனோஜிடம், இவ கண்ணு முழிச்சதும் நீ வந்துரு என்று சொல்லிவிட்டு போகிறார்.
பிறகு கண் விழித்த ரோகிணி உன் கூட எத்தனை வருஷமா நான் வாழ்ந்து இருக்கிறேன்? ஆனால் நீ என்னை அடிக்க துணிஞ்சிட்ட என்று கேட்க, அதற்கு மனோஜ் இதெல்லாமே அம்மாவோட பிளான் என்று விஜயாவை மாட்டி விடுகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட்க்கு மீனா வருகிறார். அந்த நேரத்தில் முத்து மனோஜ்க்கு பெண் பார்க்க போன இடத்தில் சொந்தக்கார பொண்ணுன்னு தெரிய வந்ததே ஸ்வேதா அவரை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட்க்கு வருகிறார்.
புது உறவு
ஸ்வேதா ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட்க்கு வந்ததும் எல்லோருடைய நல்லபடியாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு எனக்கு ஐடி வேலை பார்த்து ரொம்ப ஃபோர் அடிச்சிடுச்சுச்சு. உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் குடும்பத்தில் நீங்க எல்லாரும் வேலை பாக்குறீங்க அதில் ஏதாவது வேலை இருந்தா எனக்கு சொல்லுங்க நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.
சிந்தாமணியின் நாடகம்
அடுத்ததாக மறுபக்கத்தில் ரோகிணிக்கு அவருடைய அம்மா ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்க சிந்தாமணி ரோகிணிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணியிடம் ரோகிணி நீங்க தானே அந்த போலி சாமியாரை என்னுடைய மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சீங்க? ஆன நான் அனுப்பி வச்சேன்னு அந்த பொம்பள சொல்லி இருக்கு என்று சொல்ல, அப்படி சொல்ல நான் தான் சொன்னேன் என்று சிந்தாமணி சொல்கிறார்.
இதை கேட்டு ரோகிணிக்கு செம ஷாக் ஆகிறது. பிறகு மாஸ்டர் என்கிட்ட தான் நல்லபடியா பேசிட்டு இருக்காங்க என்னை பத்தி அவங்களுக்கு தெரிய வந்தால் அப்புறம் என்கிட்ட பேச மாட்டாங்க. பிறகு அந்த வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாது அதனால தான் உனக்காக இப்படி சொல்ல சொன்னேன் என்று கதையை மாற்றிவிட அதை ரோகிணியும் நம்பி விடுகிறார்.
அதிர்ச்சியில் விஜயா
கடைசியாக விஜயா வீட்டில் இருக்கும்போது அங்கு ஒரு பெண் வருகிறார். அவர் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கும் ஆபீஸர் என்று அறிமுகம் செய்து கொண்டு ரோகிணியை விஜயா அடித்ததாக சொல்ல, மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்த வாரத்தில் விஜயா ஜெயிலுக்கு போக போகிறாரா? அல்லது ரோகிணி விஜயாவை மன்னிப்பது போல நாடகம் போடப்போகிறாரா என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?













Click it and Unblock the Notifications