விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. காரணம் இதுதானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சீரியல் திடீரென்று முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியல் முடிவடைவது சின்னத்திரை ரசிகைகளை வருத்தமடைய செய்திருக்கிறது. அந்த சீரியலில் பைனல் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சீரியலுக்கு பெயர் போனது சன் டிவி என்றால், அதற்கு போட்டியாக வந்தது தான் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவை தான். அதிலும் விஜய் டிவியில் ஆரம்பத்தில் பிற மொழி சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்து வந்தனர். ஆனால் இப்போது இங்கு எடுக்கும் தமிழ் சீரியல்கள் தான் பழமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு விஜய் டிவி சீரியலுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

அதிலும் சன் டிவியை போலவே காலையிலிருந்து இரவு வரைக்கும் புதியது புதியதாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சன் டிவிக்கு டிஆர்பியில் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது, அந்த சீரியலின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
திடீரென முடிவுக்கு வரும் சீரியல் வேறு எதுவும் இல்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூங்காற்று திரும்புமா சீரியல் தான். இந்த சீரியல் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல நடிகர் சமீர் அகமது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களோடு ஆனந்தபாபு, ஷியாம் உள்ளிட்ட பலரும் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் ஆரம்பத்தில் ஆறு மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அதற்கு பிறகு இப்போது மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் கதாநாயகி ஷோபனா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான். அதேபோல ஹீரோ சமீர் கூட விஜய் டிவி உட்பட பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் மோதலும் காதலும் சீரியலிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
Vijay SK: ரஜினி, அஜித் உதவல.. கை கொடுத்த விஜய்! சிவகார்த்திகேயன் மறந்துட்டாரே! பிரபலம் ஓபன்
இதன் காரணமாக தற்போது அந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த சீரியல் முடிவடைந்ததும் இதற்கு பதிலாக சுற்றும் விழி சுடரே என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. சுற்றும் விழி சுடரே சீரியலில் நடிகை வினுஷா தேவி தான் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இப்போது சுற்றும் விழி சுடரே சீரியல் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
அதுபோல பூங்காற்று திரும்புமா சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வருவது அந்த சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷோபனா பூங்காற்று திரும்புமா சீரியல் தொடங்கிய நேரத்தில் கலைஞர் டிவியில் மீனாட்சிசுந்தரம் சீரியலில் கமிட்டாகி இருந்தார். அந்த சீரியல் தொடங்கிய 100 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இப்போது இந்த சீரியலும் 8 மாதங்களுக்குள் முடிவுக்கு வருவதால் அவருடைய ரசிகைகள் அவருக்கு விரைவில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications