திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வரை மிஞ்சிய சைலஜா...67,000 ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : இன்று வெளியிடப்பட்ட கேரள சட்டசபை தேர்தல் முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வரலாற்று சாதனை வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தான்.

சைலஜா டீச்சர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சைலஜா, தனது சொந்த ஊரான கன்னூரை உள்ளடக்கிய மேட்டனூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 67,013 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான இவர் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர்.

KK Shailaja reigns supreme in Mattannur with a record 67,000 margin win

தற்போதை கொரோனா தொற்று பரவல் மட்டுமின்றி 2017 -18 ல் கேரளாவில் பரவிய நிபோ வைரஸ் சூழலையும் திறம்பட கையாண்டவர். நெருக்காடியாக காலங்களில் சுகாதாரத்துறை சார்ந்த பணிகளை, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செய்து, தலைமை பண்பை நிலைநாட்டியவர். 2021 சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சியின் மிக புகழ்பெற்ற பிரச்சார பேச்சாளராகவும் இவர் தான் இருந்தார்.

23 ஆண்டுகள் பள்ளி ஆசிரியையாக சேவையாற்றி சைலஜா, 2004 ல் முழு நேர அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியில் இணைந்தார். படிப்படியாக கட்சியில் வளர்ந்த சைலஜா, 2016 ல் பினராயி விஜயன் தலைமையிலான அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.

வாக்கு எண்ணிக்கை ஓவர்.. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முடிவுகள் வெளியீடுவாக்கு எண்ணிக்கை ஓவர்.. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முடிவுகள் வெளியீடு

இந்த வெற்றியை தந்த மேட்டனூர் தொகுதி மக்களுக்கும், தன்னுடன் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்த அனைவருக்கும் பேஸ்புக்கில் சைலஜா நன்றி தெரிவித்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் கன்னூரின் குத்பரம்பா தொகுதியில் போட்டியிட்ட சைலஜா, 12.291 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் அதிகபட்சமாக காங்கிரஸ் தலைவர் பி.ஜெ.ஜோசப் 45,587 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் பினராயி விஜய் அதிகபட்சமாக 50,000 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வரை அதிக ஓட்டு வனித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை சைலஜா பெற்றுள்ளார். 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் 99 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

English summary
Shailaja teacher, won from the Mattannur constituency in her hometown of Kannur, with a margin of over 67,013 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X