For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6)

Google Oneindia Tamil News

Sometimes it happens... எப்பவுமே ஒரிஜினல்தான் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரம் டூப்ளிகேட் கூட வெற்றி பெற்று விடும்.. ஒரிஜினல் ஓரம் கட்டப்படும்.

ஒரிஜினல் வடிவேலுவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்று டூப்ளிகேட் வடிவேலுக்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.. மிமிக்ரியில். வடிவேலுவை விடுங்க.. சார்லி சாப்ளினுக்கே இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.

உலகப் பெரும் கலைஞன் சார்லி சாப்ளின்.. "சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்.. சிரிக்காத நாள் இல்லையே" என்ற பாடல் வரி சாப்ளினுக்குத்தான் நிறையப் பொருந்தும். அந்த அளவுக்கு தனது தனிப்பட்ட உணர்வுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு உலகத்தையே சிரிக்க வைத்த ஒரிஜினல் "உலக நாயகன்".

லண்டனில் சாப்ளின்

லண்டனில் சாப்ளின்

சாப்ளின் ஒருமுறை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்குப் போயிருந்தார். அங்கு அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல், பார்வையாளர் போல கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தார். பல்வேறு நிகழ்ச்சிகள் அதில் நடந்தன. அதில் ஒன்று மாறுவேடப் போட்டி. அதாவது சார்லி சாப்ளின் போல வேடமிட்டு வர வேண்டும். யார் ஒரிஜினல் சார்லி சாப்ளின் போல இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

மாறுவேடப் போட்டி

மாறுவேடப் போட்டி

வந்த கூட்டத்திலிருந்து திமுதிமுவென பலரும் பெயர் கொடுத்து பங்கேற்க ஆயத்தமாகினர். சாப்ளின் போல நடித்து பரிசை தட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் அனைவரும் இருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாப்ளினுக்குள் திடீரென ஒரு ஐடியா வந்தது. நாமும் பங்கேற்றால் என்ன.. நம்மை எந்த அளவுக்கு அடையாளம் காண்கிறார்கள் பார்ப்போம் என்று யோசித்தார். உடனே அவரும் பெயர் கொடுத்தார்.

ஒரிஜினல் சாப்ளின்

ஒரிஜினல் சாப்ளின்

டூப்ளிகேட் சாப்ளின்கள் எல்லாம் அட்டகாசமாக போட்டிக்குத் தயாராகினர். அவர் போலவே ஒட்டு மீசை வைத்துக் கொண்டும், கால்களை விரித்து நடந்தும், ஸ்டிக் வைத்து வித்தை காட்டியும் கலக்கலாக தயாராகி வந்தனர். இதையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சாப்ளின், ஒரிஜினலாக நாம் நடக்கப் போகிறோம்.. கட்டாயம் நமக்கே பரிசு என்று குதூகலமாக இருந்தார்.

டிரேட் மார்க் நடை

டிரேட் மார்க் நடை

போட்டி தொடங்கியது.. ஒவ்வொருவராக போய் வித்தையைக் காட்டினர். கிட்டத்தட்ட நிஜ சார்லி சாப்ளின் போலவே ஒவ்வொருவரின் நடிப்பும் இருந்தது. அப்ளாஸ் மழை தொடர்ந்தபடி இருந்தது. நிஜ சாப்ளின் முறை வரவே அவரும் போய் தன்னுடைய ஸ்டைல் நடிப்பையும், நடையையும், சிரிப்பையும் காட்டி விட்டு வந்தார். சரி பரிசு கிடைத்து விடும்.. இதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தார்.. ரிசல்ட்டை அறிவதற்காக.

20வது இடத்தில் சாப்ளின்

20வது இடத்தில் சாப்ளின்

வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கும் நேரம் வந்தது. பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தனர். முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் லிஸ்ட் அறிவிக்கப்பட்டது. அதில் நிஜ சாப்ளின் இல்லை.. அதை விடக் கொடுமை டாப் 10லும் கூட அவரது பெயர் இல்லை. அடடா என்னடா இது என்று நம்மாளு குழப்பமாகிப் போய் விட்டார். சரி நம்ம பெயர் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஓடிச் சென்ற அவர் லிஸ்ட்டை வைத்திருந்தவரிடம் போய் கேட்டுப் பார்த்தபோது அவரது பெயர் 20வது இடத்தில் இருந்தது. அதாவது ஒரிஜினல் சாப்ளினுக்கு, சாப்ளின் வேடப் போட்டியில் கிடைத்த இடம் 20 தான்!

வேஷம் போட்டாதான் மதிப்பு

வேஷம் போட்டாதான் மதிப்பு

நம்மாளுக்கு நெஞ்சே அடைச்சுப் போன மாதிரி ஆயிப் போச்சாம்.. அடக் கொடுமையே என்று தலையில் அடித்துக் கொண்டாராம். அவருக்கு பரிசு கிடைக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா.. அவரது டிரேட் மார்க் மீசையும், கால் பூட்ஸும் இல்லாமல் "மப்டி"யில் போயிருந்ததுதான். அதுதானே சாப்ளினின் அடையாளமே! இதை பின்னர் அவர் பலமுறை மேடைகளில் சொல்லியுள்ளார். நானாகவே இருந்தாலும் எனக்கும் வேடம் தேவை. வேடதாரிகளைத்தான் இந்த உலகம் நம்புகிறது என்று தனது பாணியில் குத்திக் காட்டிப் பேசுவார் சாப்ளின்.

(தொடரும்)

[ தொடர் : 1, 2, 3, 4, 5 ]

English summary
Once Charlie Chaplin attended a function in the US. There, he participated a fancy dress contest, but failed to win and came 20th place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X