கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.. கெமிஸ்ட்ரி புக்கில் Sad Smiley.. சுக்குநூறான கேள்வித்தாள்.. சபரிமாலா

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாணவி தற்கொலை வழக்கில் அவரது வேதியியல் புத்தகத்தில் Sad Smiley, Sorry to All என எழுதியிருந்ததாக சமூக ஆர்வலர் சபரிமாலா தெரிவித்தார்.

Recommended Video

    Karur Girl-ஐ தற்கொலைக்கு தூண்டியது யார்?.. Chemistry Book-ல் குறியீடுகள்! | Oneindia Tamil

    கரூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் தான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டேன் என தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனினும் அவரது பெயரை கூறவே எனக்கு அச்சமாக இருக்கிறது என எழுதியுள்ளார்.

    எனவே இதுகுறித்து அந்த மாணவி படித்த பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் கரூர் மாணவியின் தாயை பார்த்து ஆறுதல் கூறிய சபரிமாலா கெமிஸ்டிரி ஆசிரியர் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.

    கூசும் வார்த்தைகளால் திட்டினார்.. கரூர் மாணவி குடும்பத்திற்கு நேர்ந்த அநீதி.. உண்மையை உடைத்த ஜோதிமணிகூசும் வார்த்தைகளால் திட்டினார்.. கரூர் மாணவி குடும்பத்திற்கு நேர்ந்த அநீதி.. உண்மையை உடைத்த ஜோதிமணி

    பாலியல் துன்புறுத்தல்

    பாலியல் துன்புறுத்தல்

    இதுகுறித்து அவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கரூர் மாணவிக்கு பள்ளியில்தான் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. தந்தையை இழந்தவர். தாய் தினக் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ஒரே மகள்தான் இறந்து போன மாணவி. தனது தந்தை உயிரிழப்பால் உடைந்து போன அந்த மாணவி தான் மருத்துவராகி நிறைய பேருக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என கனவு கண்டாராம்.

    மாணவி நீட் தேர்வு

    மாணவி நீட் தேர்வு

    மாணவியின் தாயும் ஒரே பிள்ளை என்பதால் அந்த மாணவி நீட் தேர்வுக்கு தயாராவதற்காக இந்த பள்ளியில் சேர்த்துள்ளார். தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்தும் அந்த ஆசிரியர் குறித்தும் தனது சித்தி மகளிடம் கூறியுள்ளார். ஒரு நாள் ஆன்லைன் வகுப்பில் கூட இந்த மாணவியை திட்டியதை அவரது தாய் கேட்டு வேதனை அடைந்துள்ளார்.

    தோழிகள்

    தோழிகள்

    அது போல் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தோழிகளிடமும் கூறியுள்ளார். அவரது வேதியியல் புத்தகத்தில் Sad Smiley, Sorry to all என எழுதியுள்ளார். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று வந்த இந்த மாணவிக்கு வேதியியல் பாடத்தில் மட்டும் மதிப்பெண்களை அந்த ஆசிரியர் குறைத்துள்ளார்.

    போலீஸ் நிலையம்

    போலீஸ் நிலையம்

    மாணவிக்கு நடந்த அநியாயம் குறித்து போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் சித்தி மகள் சாட்சி சொல்ல போன போது , அந்த பள்ளியில் அந்த சிறுமி கூறும் பெயரில் ஆசிரியர் இல்லை என கூறி அவரது பெரியம்மாவை (இறந்த மாணவியின் தாய்) மிகவும் தரக் குறைவாக இன்ஸ்பெக்டர் பேசியுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை போதாது.

    ரெக்கார்டு நோட்டு

    ரெக்கார்டு நோட்டு

    அந்த மாணவியின் கெமிஸ்டிரி ரெக்கார்டு நோட்டை அட்டை தனியாக நோட் தனியாகவும் கேள்வித்தாளை சுக்குநூறாகவும் கிழித்துள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்த இந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை இதுவரை குழந்தைகள் நல உரிமை ஆணையமோ பழங்குடியின ஆணையமோ விசாரிக்க வில்லை.

    கடைசி பெண்

    கடைசி பெண்

    பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி இறக்கும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என அந்த மாணவி கூறியதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆந்திராவில் உள்ளது போல் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    ஆசிரியர் பணி

    ஆசிரியர் பணி

    பள்ளிகளில் பாலியல் கல்வியை புகட்ட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி பெண்களுக்கு மட்டும் என்பதை அறிவிக்க வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தேங்கியுள்ள பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக மாவட்ட தலைநகரங்களில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். பெண் குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோரிடம் தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என சபரிமாலா கேட்டுக் கொண்டார்.

    English summary
    Sabarimala says about what happened in Karur Student suicidal case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X