For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பைக்கில் போய்... வயலில் இறங்கி.. வேட்டியை மடித்துக் கட்டி பிரசாரம் செய்த என்.எஸ்.கே.!

|

கரூர்: கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.எஸ். கிருஷணன் பிரசாரக் களத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளார். பைக்கில் பயணிக்கும் அவர் வயல்களைப் பார்த்ததும உடனே அங்கு போய் விவசாயிகளிடம் சகஜமாக பேசி வாக்கு சேகரிக்கிறார். அவரது பிரசார உத்தி அனைரையும் கவர்ந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் ம.சின்னசாமியும், அ.தி.மு.க சார்பில் மு.தம்பித்துரையும், தே.மு.தி.க சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக, அதிமுக வேட்பாளர்களுக்காக நட்சத்திர பிரசாரம் களை கட்டியுள்ளது. மேலும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் தரையில் இறங்காமல் நான்கு சக்கர வாகனங்களிலும் பிரச்சார வாகனங்களிலும் போய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால் தேமுதிக வேட்பாளரோ வித்தியாசமான பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

பைக்கை எடுங்கப்பா...

பைக்கை எடுங்கப்பா...

தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தை ஒட்டிய படி வாக்குகள் சேகரித்தார்.

தொண்டர்கள் புடை சூழ பைக் ஓட்டியபடி

தொண்டர்கள் புடை சூழ பைக் ஓட்டியபடி

கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், ஆத்தூர் சோளியம்மன் கோயில், ஆத்தூர் காலனி, மண்மங்கலம், கடம்பன்குறிச்சி, நன்னியூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட ஊர்களில் தொண்டருடைய இருசக்கர வாகனத்தை ஒட்டிய படியே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

வயலில் இறங்கி வாக்கு சேகரிப்பு

வயலில் இறங்கி வாக்கு சேகரிப்பு

மேலும் வயல் வெளிகளில் வேலை பார்த்த பெரியவர்களிடமும், உழவர்களிடமும் வாக்குகள் சேகரித்தார்.

ஆளுக்கு ஒரு பைக்கில்

ஆளுக்கு ஒரு பைக்கில்

இவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இரு சக்கர வாகனத்திலே சென்று தங்களுடைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சூப்பர் பிரசாரம்

சூப்பர் பிரசாரம்

இரு சக்கர வாகனத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனின் உத்தி, மற்ற கட்சியினர் மத்தியில் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

English summary
DMDK 's Karur candidate N S Krishnan is wooeing the farmers during his campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X