வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல்.. வேலையை விட்டு நீக்கும் கம்பெனிகள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றமான, 'கேபிட்டலில்' புதன்கிழமை நடைபெற்ற வன்முறையில் பங்கேற்றவர்களின் படங்கள் சமூக ஊடகங்கள் வழியாக வெளியாகி வரும் நிலையில், பல நிறுவனங்களும் அவர்களை பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.

உதாரணத்திற்கு, மேரிலாந்தில் உள்ள சந்தைப்படுத்தல் நிறுவனமான நவிஸ்டார், தங்கள் ஊழியர் நிறுவனத்தின் ஐடி பேட்ஜை அணிந்து கேபிடல் கட்டிடத்திற்குள் சென்றதை புகைப்படத்தில் பார்த்து பணிநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது.

US protesters losing job after images surfaced on social media

"அமைதியான, சட்டபூர்வமான அனைத்து ஊழியர்களின் உரிமையையும் நாங்கள் ஆதரிக்கும் அதே வேளையில், மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடக்கும் எந்தவொரு ஊழியருக்கும் இனி நவிஸ்டார் நிறுவனத்தில் வேலை கிடையாது" என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்காஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்கா

இப்படித்தான், பென்சில்வேனியாவில், ஒரு ஆசிரியர் அவர் பணியிலிருந்து "தற்காலிகமாக விடுவிக்கப்பட்டதாக" அவரது பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவல் பற்றி முறையான விசாரணை நிறைவடையும் வரை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.

பால் டேவிஸ் என்ற டெக்சாஸ் வழக்கறிஞர் அவர் பணியாற்றிய கூஸ்ஹெட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் போராட்டம் நடத்திய போட்டோவை சோஷியல் மீடியாவில் பார்த்த கம்பெனி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

English summary
As images of protesters on Wednesday in the US Congress, Capitol, surfaced on social media, a number of companies have begun firing them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X