Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு கிளம்பி வரும் அமிர்தா..நிச்சயதார்த்த மேடையில் எழில்..கடைசியில் கோபியால்கிடைத்த அதிர்ச்சி

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா எழிலுக்கு போன் செய்து எடுக்காததால் சென்னைக்கு வந்து அங்கே எழிலுக்கு நிச்சயதார்த்தம் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

என்கேஜ்மென்ட்க்கு மண்டபத்திற்கு குடும்பத்தோடு எழில் வந்திருக்கிறார்.

கடைசி நேரத்திலும் பாக்யாவிற்கு எழில் மீது சந்தேகமாகவே இருக்கிறது.

செழியனால் கோபி திருமண மண்டபத்திற்கு வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மண்டபத்திற்கு வந்த எழில் குடும்பம்

மண்டபத்திற்கு வந்த எழில் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் எழில் உடன் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வருகின்றனர். அவர்களை வர்ஷினியும் அவருடைய அப்பாவும் வரவேற்று அழைத்து செல்கின்றனர். வர்ஷினியின் அப்பா பாக்யாவிடம் அறிமுகம் ஆகி நாம் ஏற்கனவே சந்தித்திருக்கோம். ஆனால் அப்போது தெரியாது இப்படி மீண்டும் சந்திப்போம் என்று என கூறிக் கொண்டிருக்கிறார். அனைவரும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது வர்ஷினியின் அப்பா நல்லா ரெஸ்ட் எடுங்க 7 மணிக்கு நிச்சயதார்த்தம் மறுநாள் காலை 9 மணியிலிருந்து ஒன்பது முப்பது மணி வரை முகூர்த்தம் என கூறுகிறார்.

ஈஸ்வரியின் அறிவுரை

ஈஸ்வரியின் அறிவுரை

அது மட்டுமில்லாமல் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளைக்கு தேவையான டிரெஸ் எல்லாத்தையும் வர்ஷினி பார்த்து பார்த்து எடுத்து வச்சிருக்கா, அது அவருக்கு சரியா இருக்கான்னு போட்டு பார்த்தா போதும் என சொல்ல, வர்ஷினி எழிலை கூப்பிட ஈஸ்வரி செழியனையும் எழிலோடு அனுப்பி வைக்கிறார். பிறகு எழில் விருப்பமில்லாமல் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி முகத்தை எதற்கு இப்படி உம்மென்று வைத்திருக்கிறாய் சந்தோஷமா சிரித்தபடி இரு என்று அறிவுரை கூறுகிறார்.

சென்னைக்கு கிளம்பும் அமிர்தா

சென்னைக்கு கிளம்பும் அமிர்தா

மறுபக்கம் அமிர்தா எழில் பேசிய வார்த்தைகளை நினைத்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். பிறகு எழில் மற்றும் சதீஷிற்கு ஃபோன் செய்து பார்க்க இருவரும் போனை எடுக்காததால் குழப்பம் அடைந்து சென்னைக்கு கிளம்ப முடிவு எடுத்து அப்பா அம்மாவிடம் பேச அவர்கள் அங்கே செல்ல வேண்டாம் இது தேவையில்லாதது என்று கூறுகிறார்கள். எழில் வேண்டாம் என்று தானே நாம் அங்கு இருந்து இங்கே வந்தோம் மீண்டும் எதற்கு பிரச்சனை என்று கூறுகின்றனர் .எழில் வீட்டில் ஏதோ பிரச்சனை என்று எனக்கு மனதிற்கு தோன்றி கொண்டே இருக்கிறது என்று பேசி அவர்களின் மனதை மாற்றி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வருகிறார்.

மண்டபத்திற்கு வந்த கோபி

மண்டபத்திற்கு வந்த கோபி

மண்டபத்தில் இருக்கும் பாக்யா எழிலுக்கு இதெல்லாம் பிடித்துதான் நடக்குது இல்லையா? என்று குழப்பத்தில் இருக்கிறார். பிறகு எழிலை பார்க்க ரூமுக்கு போயி அப்போது கண்ணாடியில் ஜாடையாக பாக்கியா எழிலிடம் பேசுகிறார். இதைக் கவனித்த ஈஸ்வரி பாக்யாவை பேசவிடாமல், இப்பதான் அவன் நல்லபடியா இருக்கான் அவன் மனசை மாற்ற பார்க்குறியா என்ன திட்டி வெளியே அழைத்து சென்று விடுகிறார். அதே நேரத்தில் கோபி ராதிகா மயூ மற்றும் இனியா உடன் மண்டபத்திற்கு வருகிறார். அவர்களை செழியன் வரவேற்க கோபியை பார்த்த ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்ததாக நாளை உள்ள பிரமோவில் அமிர்தா எழில் வீட்டிற்கு வர, வீட்டின் கதவுகள் பூட்டி இருப்பதால் பக்கத்தில் விசாரித்து பார்க்கிறார். அவர்கள் எழிலுக்கு நிச்சயதார்த்தம் என்று கூறுகின்றனர். இதை கேட்டு அமிர்தா அதிர்ச்சி அடைகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+