ரச்சிதாவை பற்றி மைனா கூறிய ரகசியங்களை புறம் பேசும் ஏடிகே... இப்படியா பேசணும்? கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒருவரை மாற்றி ஒருவர் புறம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரைக்கும் ரட்சிதா எந்த மாதிரியும் கோபப்படவில்லையே என்று ஏடிகே பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

ரச்சிதாவின் தோழியாக இருக்கும் மைனா நந்தினி அவரைப் பற்றி பல விஷயங்களை கூறியிருக்கிறாராம். அதைக் குறித்து கூட அந்த வீடியோவில் ஏடிகே உளறி இருக்கிறார்.

பல வருட காத்திருப்பு

பல வருட காத்திருப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு மைண்ட் கேம் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலர் தங்களுடைய நிஜமான கேரக்டரில் இருக்கிறோம் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில நாட்கள் தான் ஆனால் தொடர்ச்சி நடிக்க முடியும் தங்களை சுற்றி 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் இருந்தாலும், அவர்கள் இயல்பாக ஒரு சில நாட்களிலே வந்து விடுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு போனால் நான் அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என்று வெளியே இருந்து பலரும் கருத்து கூறி வந்தாலும், இந்த நிகழ்ச்சியில் என்ன மாதிரி இருக்கிறார்கள் என்பது உள்ளே சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த மாதிரி பல வருடங்களாக காத்திருந்து இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரச்சிதா அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இதுதான் புறம் பேசுதல்

இதுதான் புறம் பேசுதல்

ஆரம்பத்தில் இருந்தே ரச்சிதா உண்மையான கேரக்டரை இந்த நிகழ்ச்சியில் காட்டவில்லை, ரசிகர்களின் முன்பு பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று ஒவ்வொரு போட்டியாளர்களும் அவருடைய முகத்துக்கு நேராகவோ மறைவாக நாமினேஷனில் கூட கூறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று டாஸ்க் நடைபெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரையும் வெளியே அமர வைத்திருக்கின்றனர். அப்போது விக்ரமன்,ஏடிகே, ராம் மூவரும் தனியாக அமர்ந்து இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஏ டி கே நாம் இந்த வீட்டில் என்னதான் பேச, ஒருவரை மாற்றி ஒருவர்தான் பேச வேண்டும். அப்படி பேசினால் புறம் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இதனால் என்ன பேச என தெரியலையே என சொல்ல நாம் பேசுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கும் அதை பத்தி பேசுவோம் என ராம் மற்றும் விக்ரமன் சொல்ல ,என்ன பேச என்று யோசித்தபடியே ரட்சிதாவை பற்றி பேச்சை எடுக்கிறார்.

விக்ரமனின் கேள்வி

விக்ரமனின் கேள்வி

இந்த வீட்டிற்குள் எல்லா போட்டியாளர்களும் சண்டை போட்டு விட்டார்கள். குறிப்பாக கதிரவன் கூட அந்த டாஸ்க்கில் தன்னுடைய கோபத்தை காட்டிவிட்டார். ஆனால் கோபத்தையே காட்டாமல் எப்போதும் சிரித்தபடியே இருப்பது ரச்சிதா மட்டும் தான். அதனால் தான் சொல்கிறேன் அவர் வந்து இன்னும் சுய கேரக்டரில் இங்கே விளையாடவில்லை. முகமூடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார் என்று கூற, அவர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி எதற்காக பேச வேண்டுமா? அது தான் அவருடைய குணம் என்று அவரே கூறுகிறாரே என விக்ரமன் தடுக்கிறார்.

மைனாவை போட்டுக் கொடுக்கும் ஏடிகே

மைனாவை போட்டுக் கொடுக்கும் ஏடிகே

இல்லை அது அவருடைய கேரக்டரே கிடையாதாம். ரச்சிதா வெளியே அதிகமாக கோபப்படுவாராம். சூட்டிங் ஸ்பாட்டில் கூட பலமுறை கோவப்பட்டு இருக்கிறாராம். கோபப்பட்டால் சூட்டிங் கூட போகாமல் இருந்து விடுவார் என மைனாவே சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்த வீட்டிற்குள் எதற்காக இப்படி அமைதியாகவே இருக்க வேண்டும். அவரிடம் எதுவும் பேசினாலும் சிரித்தபடி சைலண்டாகத்தான் பேசுகிறார். இது நம்புற மாதிரி இல்லையே என்று ஏடிகே பேச, அது அவருடைய ஸ்டேட்டர்ஸி ஆக கூட இருக்கலாம். வெளியே அப்படி இருந்திருக்கலாம் உள்ளே வந்து எல்லோரும் நமக்கு மேலே இருக்கிறார்களே என்று அவருடைய கேரக்டர் மாறி இருக்கலாம் என்று ராம் கூற, இல்லை இல்லை இங்கே ரொம்பவே பாகுபாடு பார்க்கிறார். சமையல் அறையில் ரச்சிதா நிற்கும்போது நாம் போய் சாப்பாடு கேட்டால் கூட ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு தான் சாப்பாடு போடுகிறார். இது நல்லாவே இல்லை பார்ப்பதற்கு என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ரச்சிதா, ஷிவின்,தனலட்சுமி மூவரும் யாரைப் பற்றியும் பேசாமல் ஒருவர் மாற்றி ஒருவர் பாட்டு பாடி தன்னுடைய திறமையை காட்டி கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+