Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 22ஆம் தேதிக்கான எபிசோடில், தங்கமயிலின் அப்பாவும் அம்மாவும் பாண்டியன் வீட்டிற்கு சென்று சரவணன் பற்றி தப்புத் தப்பாக பேச அதனால் பெரிய பிரச்சனையே நடக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் பற்றிய உண்மைகள் எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து ரசிகர்களுக்கு இருந்த நிலையில் கடைசியில் அந்த உண்மையும் பெரிய பஞ்சாயத்துக்கு இடையே வீட்டிற்கு தெரிய வந்தது. இதனால் தங்கமயிலை சரவணன் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டிருந்தார். இந்த நிலையில் தங்கமயில் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு
(Pandian Stores 2 seirial episode) ஆனால் அந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் கிடையாது என்று சரவணன் சொல்லிவிட்டார். ஆனால் இதை சொன்னது சரவணனுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை அவர் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக நாடகம் போடுகிறார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தங்கமயில் இதுவரைக்கும் தன்னுடைய அப்பா அம்மா பேச்சை கேட்டு பொய் மேல் பொய் சொல்லி தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது இனி நானே என்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன் என்று வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கென ஒரு சம்பளம் கிடைக்கிறது.
கதறி அழுத தங்கமயில்
இந்த நிலையில் சரவணன் அவருடைய முன்னாள் காதலி அஞ்சலியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தங்கமயில் அதிர்ச்சியாகி அழுது இருக்கிறார். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் இருக்கிறார். இந்த நிலையில் சரவணனும் அஞ்சலியும் கோவிலில் பேசிக் கொண்டிருப்பதை மயில் அப்பா பார்த்து அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார். இதை வைத்துதான் தற்போது பஞ்சாயத்து வந்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
அதாவது இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் (Pandian Stores 2 serial promo) தங்கமயில் அப்பாவும் அம்மாவும் பாண்டியன் வீட்டிற்குள் வந்து, பொண்டாட்டிய வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டு உங்க மகன் ஒரு பொண்ணு கூட சுத்திகிட்டு இருக்கிறான். இதுதான் நீங்க பிள்ளை வளர்த்த லட்சணமா? என்று கேட்க, அதை கேட்டு கோபமான பாண்டியன் தேவையில்லாததெல்லாம் பேசிட்டு இருக்கீங்களா என்று கத்த, சரவணன் தங்கமயிலின் அப்பாவை போட்டு அடிக்கிறார்.
மாமனாரை அடித்த சரவணன்
அந்த நேரத்தில் தங்கமயில் அங்கு வந்து அதை பார்த்து அதிர்ச்சியாகி, என்னுடைய வாழ்க்கைக்காக இனி யாரும் எங்கேயும் பிரச்சனை பண்ண வேண்டாம் என்று சொல்லி அப்பா அம்மாவை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் மயிலின் அம்மா பாக்கியம், உன் வயிற்றில் அவரோட புள்ளை வளருது... அவங்க கிட்ட நியாயம் கேட்காமல் எதுக்காக எங்களை அங்கிருந்து கூட்டிட்டு வந்த என்று கேட்கிறார்.
தங்கமயில் எடுத்த முடிவு
அதற்கு மயில் எனக்காக நீங்க பேசி பேசி பிரச்சனை உருவாக்குனது போதும். இனி நான் இந்த வீட்டில் இருக்கிற வரைக்கும் உங்களுக்காகவும் என் குழந்தைக்காகவும் சம்பாத்தியம் பண்ணி போடுறேன் என்று அழுதபடியே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சரவணனிடம் நண்பன், நீயும் அஞ்சலியும் காலேஜ் படிக்கும்போது அவ்வளவு லவ் பண்ணுனீங்க, ஆனா பிரிஞ்சாலும் இப்போ மீண்டும் ரெண்டு பேரும் சேருவதற்கு.. ஏதோ காரணம் இருக்கு என்று சொல்லிவிட்டு போயிருந்தார்.
இனி நடக்க போவது என்ன?
அதையே சரவணனும் அஞ்சலியிடம் சொல்லி இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் கல்யாணம் பண்ண போகிறார்களா? என்ற கேள்விகளும் வருகிறது. ஒருவேளை கல்யாணம் செய்வதற்காக முயற்சிகள் நடந்தால் சீரியல் இன்னும் விறுவிறுப்பாக போகும். அதே நேரத்தில் இனியாவது மயில் யாரிடமும் அழுது கெஞ்சி கொண்டிருக்காமல் அவருடைய முயற்சியால் அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடிகர் சிம்புவுடன் கல்யாணமா? லீக்கான போட்டோ.. பின்னணி சம்பவம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி














Click it and Unblock the Notifications