என்னது வனிதா அக்காவின் சாயலா...கொழுத்தி போட்டுட்டாரு அபிஷேக்...இது அவங்களுக்கு தெரியுமா
சென்னை: எதார்த்தமாக பேசுகிறேன் என அபிஷேக் பேசிய வார்த்தை தற்போது பிக்பாஸ் ரசிகர்களை காண்டாக்கி இருக்கிறது.
அபிஷேக் ரிவ்யூ தொடங்கியதும் ஓடி வந்துவிட்டனர் நெட்டிசன்கள்.
வந்த இடம் தெரியாமல் அமைதியாக இருக்கும் நாடியா சிங்கை வனிதாவுடன் ஒப்பிட்டு ரசிகர்களை காண்டாக்கி விட்டிருக்கிறார்.

ப்ரோமோவில் வலம்வரும் அபிஷேக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் யூடியூப்பர் அபிஷேக் கலந்து கொள்ள போகிறார் என்று தெரிந்ததும் அவருடைய ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர். காரணம் தினமும் கன்டன்ட் பஞ்சமில்லாமல் கிடைக்கும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு ஆனால் அபிஷேக் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் தினமும் விதவிதமாக கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி அதில் ஒருவர் மட்டும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனாலும் அதிகமாகப் ப்ரோமோவில் இடம்பிடிக்கும் ஒருவராக அபிஷேக் இருந்துவருகிறார்.

பெரிய அறிவாளி தான்
யூடியூபர் அபிஷேக் தன்னை ஒரு சினிமா பையன் என்று அழைத்துக் கொண்டு சினிமாக்கள் முதல் பிக்பாஸ் வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் ரிவ்யூ கொடுத்து நெட்டிசன்கள் வாயில் அடிக்கடி மாட்டி விடுவதுதான் இவருடைய வழக்கம். ஆனாலும், இவரை ரசிக்க ரசிகர்கள் கூட்டம் ஒருபுறம் இருக்கத் தான் செய்கிறது. ஏற்கனவே பல திரைப்பிரபலங்கள் பலரை பேட்டி எடுக்கிறேன் என்று கூறி அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி அவருடைய ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக் கொள்வது இவருடைய வழக்கமான ஒன்றுதான். ஆனால் இவர் அதே பாணியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து வருகிறார்.

உண்மையில் யார் இவர்
சில நேரங்களில் இவர் காமெடி செய்கிறேன் என்று செய்யும் செயல்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஆனால் பல நேரங்களில் இவர் அடுத்தவர்களுக்கு அனுசரணையாக அடுத்தவர்களின் மனம் கோணாதபடி நடந்து கொள்வது இவருடைய உண்மையான கேரக்டர் தானா அல்லது இது நடிப்பா என்று புரிந்து கொள்ள முடியாததாக தான் இருந்து வருகிறது. யாரையும் ஒரு வாரத்தில் மக்களால் புரிந்துகொள்ள முடியாது. அதைப்போலத்தான் இவரையும் புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இங்கேயும் ரிவ்யூவா? ?
நேற்றைய எபிசோடில் இவரையும் சேர்த்து பல போட்டியாளர்கள் எலிமினேஷன் பட்டியலில் இருக்கும் போது இவர் ஒவ்வொருவரையாக பற்றிய ரிவ்யூ எடுத்துக்கொண்டிருக்கிறார். அதில் நாடியா சாங்க். இவர் ஜெர்மனியை சேர்ந்த ஒரு டிக் டாக் பிரபலம் என்பதால் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறார். ஆனால் தமிழ் மக்களின் மத்தியில் அதிகம் பிரபலமாகாத இவர் இந்த நிகழ்ச்சியிலும் யாரிடமும் இன்னும் அதிகமாக செட் ஆகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரைப் பார்த்து இவர் வனிதாவின் கேரக்டரில் இருப்பார் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் என்று அபிஷேக் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்களை கிளப்பி வருகிறது. ரிவ்யூ சொல்லலாம் ஆனால் அதற்காக ஒரு வரைமுறை இல்லாமல் இப்படியெல்லாம் பேசலாமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications