Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சில நாட்களுக்கு முன்பு கொக்குவித்து கோமாளி சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தன்னை கானா வினோத் புகழ் மற்றும் மாகாபா மூன்று பேரும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள் ஆபாசமாக பேசினார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் பரவி வந்த நிலையில் திவாகரின் குற்றச்சாட்டுகளுக்கு கானா வினோத் மற்றும் மாகாபா ஆனந்த், புகழ் ஆகியோர் விளக்கம் அளித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cook With Comali vijay tv

திவாகர் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்

முதலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை தாக்கியதாக திவாகர் புகார் அளித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளில், கானா வினோத் மற்றும் புகழ் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், குடும்பத்தையும் இழிவாக திட்டினார்கள் என்றும், மாகாபா இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறியிருந்தார். அதோடு சென்னையில் இனி வேலை செய்ய முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லியிருந்தார்

மேலும் "கானா வினோத் கஞ்சா குடித்துவிட்டு வந்தார்... பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் கூட என் கண் முன்னே கஞ்சா பயன்படுத்தி இருந்தார்" என்றும் கூறியிருந்தார். அதோடு, தன்னை ஜாதி ரீதியாக அவமதிக்கிறார்கள் என்றும் திவாகர் கூறியிருந்தார்.

கானா வினோத் மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கானா வினோத் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "எந்த விஷயத்திலும் ஜாதியை இழுத்து வர்றது திவாகர்தான். அவருடைய மனசுக்குள்ளே தான் ஜாதி ஊறி இருக்கிறது. எங்களை சேரி, என்றும் குப்பம் என்றும் எங்களுடைய ஜாதியை அவமதித்து பேசுறது அவர்தான்.

மேலும், "நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரின் மனைவியிடம் தகாத முறையில் பேசினார். அதற்கு தான் நாங்கள் கேள்வி கேட்டோம். உடனே விஷயத்தை மாற்றி, ஜாதி பற்றி பேச ஆரம்பிச்சுட்டார்."

வினோத் அதிருப்தி

தன்னை பற்றி "கஞ்சா குடித்து வந்தார்" என்ற குற்றச்சாட்டை பற்றி கானா வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார், "அப்படி பேசுறது கேட்கவே வருத்தமா இருக்கு. நான் எப்படி உழைத்து வந்திருக்கேன் என்று எல்லாருக்கும் தெரியும். இப்படிச் சொல்வது சரியில்லை."

மாகாபா

மாகாபா ஆனந்த்வும் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்."ஒரு போட்டியாளரின் கணவர் முன்னாடியே, செல்லம் நீ இத்தனை நாளு இவரு கூட வாழ்ந்துட்ட ஒரு நாள் என் கூட வா என்று கேக்குறாரு இது கூட காமெடியா? அதுதான் நாங்க கேள்வி கேட்டோம்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

மேலும்,நான் குடிச்சு வந்தேன் என்று சொல்வது முற்றிலும் தவறு. 18 மணி நேரம் நின்று நிகழ்ச்சி நடத்துறவன் நான். அது எப்படி சாத்தியம்?" என்றும் கேட்டு இருக்கிறார். சின்னத்திரை உலகில் நடந்த இந்த மோதல், சாதாரண கருத்து வேறுபாடை தாண்டி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. போலீஸ் விசாரணை, சேனல் தரப்பு நடவடிக்கை, வெளிவரும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த விவகாரத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வரும். அதுவரை, இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+