மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பிய மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம், தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு, மறுப்பு, நீதிமன்றம் என சென்ற இந்த பிரச்சனைக்கு, டிஎன்ஏ பரிசோதனை முடிவு ஒரு பெரிய பதிலை கொடுத்திருக்கிறது.

செஃப் மாதம்பட்டி ரங்கராஜன்
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை அடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் சோசியல் மீடியா மூலம் பலருக்கும் பரிச்சயமாக மாறியிருந்தார். அதுபோல மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாகவும் கதாநாயகனாக பிரபலம் அடைந்திருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட சில மாதங்களிலேயே இவரைப் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது
மாதம்பட்டி ரங்கராஜன் போட்ட சவால்
அதாவது மாதம்பட்டி ரங்கராஜனுக்கு ஸ்ருதி என்ற மனைவி இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக போஸ்ட் போட அது பெரிதாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் ஜாய் கர்ப்பமாக இருந்ததாகவும் அறிவித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, ஜாயிடம் இருந்து ரங்கராஜ் விலக ஆரம்பித்தது இந்த பிரச்சனையின் தொடக்கமாக மாறியது. இதனால் மனஉளைச்சலுக்குள்ளான ஜாய், நேரடியாக பொதுவெளிக்கு வந்து நியாயம் கேட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜன் போஸ்ட்
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றபோது, "குழந்தை என்னுடையது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்தால், நான் பொறுப்பேற்க தயார்" என்று ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை தான் இப்போது எல்லாவற்றுக்கும் முடிவு கட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த பரிசோதனை முடிவில், ஜாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தை ரங்கராஜ் தான் என்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாய் கிரிஸில்டா பதிவு
இந்த தகவல் வெளிவந்த உடனே, ஜாய் கிரிஸில்டா உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். "என் மனம் நன்றியால் நிரம்பி வழிகிறது... என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றி சொந்தம்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, "நான் இன்று நிற்கும் இடம் ஒரு தாய் போராட்டத்தின் சாட்சி" என்ற அவரது புதிய பதிவு, இந்த விவகாரத்தை இன்னும் உணர்வுபூர்வமாக மாற்றியுள்ளது.
ஒரு பெண்ணாக, குறிப்பாக ஒரு தாயாக, தன் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் சந்தித்த மனஅழுத்தம், அவமானம், சந்தேகங்கள்-இவற்றையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு நிற்கும் ஜாயின் போராட்டம் பலரையும் நெகிழச்செய்துள்ளது.
"ஒரு பெண்ணின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கே தந்தை இல்லை என்று சொல்லப்படும் நிலையில் கூட தைரியமாக நின்று உண்மையை நிரூபித்திருக்கிறார்" என்று சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்!
- தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே
- கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு!
- வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம்
- தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்
குவியும் கமெண்ட்ஸ்
இப்போது ஜாய் பகிர்ந்துள்ள பதிவுகள் வெறும் சந்தோஷத்தை மட்டும் காட்டவில்லை; அது ஒரு தாயின் வெற்றி, அவர் சந்தித்த போராட்டத்தின் முடிவு, மற்றும் தன்னம்பிக்கையின் சாட்சி என்ற அளவுக்கு பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த விவகாரம் ஒரு சாதாரண சர்ச்சையை தாண்டி, ஒரு பெண்ணின் உரிமை, மரியாதை, மற்றும் உண்மைக்கான போராட்டம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
அவன் இவன் பட நடிகை ஜனனிக்கு எளிமையான கல்யாணம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?













Click it and Unblock the Notifications