ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கி
சென்னை: ரம்யா கிருஷ்ணனை அருகில் பார்க்கும்போது கூலாக இருந்தது.
அப்படியே என்னை பார்த்தது போல இருந்தது என்று ஐக்கி கூறியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் என்னை எலிமினேஷன் செய்ததால் எனக்கு பெரிய அளவில் பதட்டம் இல்லை என்று தன்னுடைய அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் ஐக்கி பகிர்ந்துள்ளார்.

மாற்றத்தில் மாட்டிக்கொண்ட ஐக்கி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் தொகுப்பாளராக இருக்கும் கமல் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளரின் பெயரை கூறி எலிமினேஷன் செய்து வைப்பார். ஆனால் முதல்முறையாக இதில் ஏற்பட்ட மாற்றத்தில் மாட்டி இருப்பது ஐக்கி தான். ஐக்கியின் மனநிலை தற்போது எப்படி இருந்தது என்று தன்னுடைய அனுபவத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

சோகத்திலும் மாறாத குணம்
பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பாப் பாடகர் ஐக்கியின் வெளியேற்றம் அவருடைய ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. இவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்றைய எலிமினேஷன் பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துவிட்டது. ஆனால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு நாட்களாக தனக்கு வாக்களித்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறி உளளார். அதுமட்டுமல்லாமல் இந்த முறை அவர் வெளியேறி இருந்தாலும் எனக்கு அந்த அளவிற்கு வருத்தம் இல்லை என்று வழக்கமான சுறுசுறுப்போடு கூறியிருக்கிறார்.

ஆசை நிறைவேறவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அதிகமாக மொபைல் போனில் மூழ்கியிருந்த ஐக்கி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மொபைலை கையில் எடுத்ததும் பெரிய அளவில் ஈர்ப்பு எதுவும் எடுபடவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமே என்றுதான் லைவில் வந்து ரசிகர்களுடன் தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் முதல் முறையாக கமலை மிஸ் பண்றீங்களா என்று கேட்டதற்கு ஆமாம் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அதுவும் நான் வெளியேறும் நேரத்தில் கமல் பக்கத்தில் நின்று நிறைய பேச வேண்டும் அது ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை என்று தன்னுடைய பீலிங்கை கொட்டியிருக்கிறார்.

வெளியேயும் மாறாத கேரக்டர்
அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் போது நீங்கள் வெளியேறி இருப்பதால் என்ன மாதிரி ஃபீல் பண்ணுனீங்க?? என்று ரசிகரின் கேள்விக்கு நான் ரம்யா கிருஷ்ணன் மேடத்தை பார்க்கும்போது என்னையே பார்த்ததாக உணர்ந்தேன். அவருடைய இளமையும், சுறுசுறுப்பும் எனக்கு என்னை பிரதிபலிப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அருகில் இருக்கும் போது நான் கூலாக தான் இருந்தேன். பெரிய அளவில் வெளியே போகிறோம் என்று பதட்டம் எதுவும் ஏற்படவில்லை. ஜாலியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறேன். ரசிகர்களின் அன்போடு மீண்டும் ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பேன் என்று அவருடைய வழக்கமான படபடப்போடு பேசியிருக்கிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications