சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial March 27, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோட்டில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் செய்வதற்காக பார்த்த பெண் பற்றிய ரகசியம் தெரிய வருகிறது. அதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். அதனால் ரோகிணியை பழி வாங்குவதற்காக மனோஜ் இன்னொரு பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் செய்வதற்காக மேட்ரிமோனியில் பெண் பார்த்த யமுனா மனோஜுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் 4 முறை கல்யாணம் நிச்சயிக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் அது நடக்காமல் போய்விட்டதாக சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனோஜ், ஏன் ஒவ்வொரு முறையும் கல்யாணம் நின்றது என்று கேட்கிறார்.
மனோஜ்க்கு தெரிந்த உண்மை
அதற்கு யமுனா, முதல் முறை கல்யாணத்திற்கு முன் மாப்பிள்ளையின் அப்பா இறந்துவிட்டாராம். இரண்டாவது முறை மாப்பிள்ளையின் அம்மா இறந்துவிட்டாராம். மூன்றாவது முறை மாப்பிள்ளையின் அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டார்களாம். நான்காவது முறை மாப்பிள்ளையின் குடும்பமே விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லுகிறார்.
இதைக் கேட்ட மனோஜ் உள்ளுக்குள் பயந்து போய்விடுகிறார். "அடுத்தது என்னையும் கொல்லப் பிளான் பண்றாளோ?" என்று மனசுக்குள் நினைத்துக் கொள்கிறார். ஆனால் வெளியில் ஒன்றும் காட்டாமல், "நான் யோசித்து சொல்கிறேன்" என்று சொல்லி யமுனாவை அனுப்பிவிடுகிறார்.
அண்ணாமலை வீட்டில் விருந்து
இதற்கிடையில் வீட்டில் வேறு விஷயம் நடக்கிறது. மீனா மீண்டும் வீட்டுக்கு வந்ததால், அண்ணாமலை பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறார். தனது நண்பர் பரசு, விஜயாவின் தோழி பார்வதி உள்ளிட்ட பலரையும் அழைக்கிறார்.
விருந்துக்கு வந்திருந்த சீதாவிடம், அருணுக்கு உன் மேல இருந்த கோபம் குறைந்ததா என்று அண்ணாமலை கேட்கிறார். அதற்கு சீதா, அவர் சமாதானமாகிவிட்டார் என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த போலீஸ்
அந்த நேரத்தில் போலீசார் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்து முத்து "என்ன சார், ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்கிறார். அதற்கு போலீஸ் "நாங்க வந்தாலே பிரச்சனைனா?" என்று கேட்டு பதில் தருகிறார். பின்னர் உண்மை தெரிய வருகிறது. முன்பு நடந்த திருட்டு சம்பவத்தில் உதவி செய்ததற்காக, நகைகளை மீட்டுத் தந்ததற்கு நன்றி சொல்ல தம்பதியினர் போலீஸுடன் வந்து முத்துவுக்கும் மீனாவுக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். அதோடு தங்க நாணயங்களை பரிசாக கொடுக்கிறார்கள்.
கோபத்தில் விஜயா
முதலில் முத்து அதை வாங்க மறுக்கிறார். ஆனால் அண்ணாமலை சொன்னதால் இறுதியில் வாங்கிக்கொள்கிறார். இதையெல்லாம் பார்த்த விஜயாவுக்கு கோபம் வருகிறது. உடனே மனோஜுடன் ரூமுக்குள் சென்று, "இந்த நிலைக்கு என்னை கொண்டு வந்த ரோகிணியை சும்மா விடக்கூடாது" என்று கோபமாக சொல்கிறார். அதற்கு மனோஜ் "என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது" என்று கூறுகிறார்.
மனோஜ் போட்ட பிளான்
அதற்குப் பிறகு மனோஜ் ஷோரூமுக்கு சென்று, அங்கிருந்து ரோகிணிக்கு போன் செய்கிறார். மனோஜ் அழைத்ததால் ரோகிணி மிகவும் சந்தோஷமாக பேசுகிறார். மனோஜும் நல்லபடியாக பேசுவது போல நடிக்கிறார். "உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்" என்று மனோஜ் சொன்னதும், "நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்" என்று ரோகிணி உடனே ஒப்புக்கொள்கிறார். போன் வைக்கும் முன் "ஐ லவ் யூ" என்று ரோகிணி சொல்கிறார். மனோஜும் "ஐ லவ் யூ டூ" என்று பதில் சொல்லி போனை வைக்கிறார்.
இதனால் ரோகிணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் சந்தேகமும் வருகிறது. "இத்தனை நாள் என்னை வெறுத்த மனோஜ் இப்போ ஏன் இவ்வளவு பாசமாக பேசுறான்?" என்று யோசிக்கிறார். ஆனால் உடனே அந்த சந்தேகத்தை தள்ளிவிட்டு, "அவனுக்கு என்னை சிக்க வைக்கும் அளவுக்கு புத்தி இல்லை" என்று நினைத்து, மனோஜ் கூப்பிட்ட இடத்துக்கு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?














Click it and Unblock the Notifications