சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ஸ்வேதாவைச் சுற்றி தற்போது உருவாகியுள்ள சர்ச்சை, சின்னத்திரை வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காதல், திருமணம், மோசடி குற்றச்சாட்டு என பல திருப்பங்களுடன் இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் அவர் கதறி அழுது வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay TV Actress Shwetha

காதலிலிருந்து சர்ச்சை

ஸ்வேதா சின்ன மருமகள் சீரியலில் தான் புருஷன் குடும்பத்தால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று பார்த்தால் நிஜத்திலும் அவருடைய கதை அப்படித்தான் இருக்கிறது. அதாவது சமீபத்தில் ஆதி என்ற நபர், "நான் தான் ஸ்வேதாவின் கணவர்" என்று வெளியில் கூறியதிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியது. ஆனால் இதை ஸ்வேதா கடுமையாக மறுத்தார். "யாரும் இவரை நம்பி ஏமாற வேண்டாம், இவர் ஒரு மோசடிக்காரர்" என்று அவர் வெளிப்படையாக கூறியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த விவகாரம் அதில் முடிவடையாமல், அதே சீரியலில் நடித்த தாமரைச்செல்வியும் தன்னிடம் மூன்று சவரன் நகை வாங்கி ஏமாற்றியதாக ஆதியை குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டார். இதனால் இந்த சர்ச்சை இன்னும் பெரிதாகியது. ஆனால் ஆதி இந்த குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்தார்.

கண்ணீருடன் ஸ்வேதா வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில், நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் உடைந்த நிலையில் ஒரு வீடியோ வெளியிட்டு தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது மிகவும் மனதை உருக்கும் வகையில் இருந்தது. "நான் 21 வயதில் அவரை காதலித்தேன். அவருக்காக என் குடும்பத்தையே விட்டுவிட்டேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஆரம்பத்தில் வாழ இடமே இல்லாமல் வீதியில் அலைந்தேன். ஒரே ஆடையை பல நாட்கள் அணிந்திருக்கிறேன். அந்த எல்லா கஷ்டங்களும் அவனுக்காகத்தான்.

திருமணம் நடந்ததாக சொல்லிக்கொண்டாலும், சரியான முறையில் எதுவும் நடக்கவில்லை. ரிஜிஸ்டர் திருமணமும் இல்லை. நான் மட்டும் வேலை செய்து சம்பாதித்து வீடு வாங்கி வாழ்க்கையை கட்டியெழுப்பினேன். ஆனால் அவன் எதுவுமே செய்யவில்லை. என் உழைப்பின் பலனை மட்டும் அனுபவித்தான்.

பிறகு அவன் பலரையும் ஏமாற்றியிருப்பது தெரிய வந்ததும் நான் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இனிமேல் யாரையும் இப்படி ஏமாற்றாதே" என்று கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி, பலரின் இரக்கத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

உறவில் திருப்பம்

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கிய திருப்பமாக தாமரைச்செல்வி மற்றும் ஸ்வேதா இடையேயான உறவு மாறியுள்ளது. ஆரம்பத்தில் தாமரைச்செல்வி, "நான் தான் ஸ்வேதாவுக்காக ஆதியை எங்கள் வீட்டுக்குள் சேர்த்தேன். ஆனால் இப்போது ஸ்வேதா என்னுடன் பேசவே இல்லை" என்று வருத்தத்துடன் பேசியிருந்தார்.

ஆனால் தற்போது நிலைமையே மாறியுள்ளது. ஸ்வேதா வெளியிட்ட வீடியோவுக்கு தாமரைச்செல்வி லைக் செய்திருப்பது, இருவரும் மீண்டும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இதனால், இந்த பிரச்சனையில் உண்மை எது என்ற கேள்வி மேலும் தீவிரமாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எதிரொலி

ஸ்வேதாவின் வீடியோ வெளியான பிறகு, பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "இது ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்", "இப்படி நடந்த அனுபவத்தை தாண்டி வலுவாக நிற்க வேண்டும்" என்று பலர் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அதே நேரத்தில், ஆதி தொடர்ந்து தன்னிடம் தவறு இல்லை என்ற வகையில் பதிவுகள் வெளியிட்டு வருவது இந்த சர்ச்சையை மேலும் நீட்டிக்கிறது.

முடிவுக்கு வராத சர்ச்சை

ஒரு சாதாரண காதல் கதையாக தொடங்கிய இந்த சம்பவம், இன்று மோசடி, நம்பிக்கை துரோகம், பிரேக்கப் என பல அடுக்குகளுடன் கூடிய பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+