For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள்

By BBC News தமிழ்
|

Click here to see the BBC interactive

2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்.

இதனை சிறப்பு அரசு வழக்குரைஞர் அமித் படேல் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

2008 ஜூலை 26 அன்று, குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்புகள் குஜராத் மாநிலத்தையே கலங்க வைத்தன. இந்திய முஜாஹிதீன் மற்றும் தீவிரவாத குழுவான ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றன.

இந்த குண்டுவெடிப்பு நடந்த உடனேயே குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஹூசைன் இப்ராஹிம், ஹசில் முகமது, அப்துல் காதிர் ஆவர்.

மேலும், குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட முப்தி அபு பஷீர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தது. மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட நசீர் ரங்ரேஸ் என்பவரும், எட்டு ஆண்டுகள் கழித்து 2016-ல் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், சிமி அமைப்பின் சப்தார் மன்சூரி மற்றும் சப்தார் நகோரி உள்ளிட்ட 50 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத் காவல் துறையின் சிறப்புப் படை, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 70 பேரை கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 பேரை குற்றவாளிகள் என பிப்ரவரி 8ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(இந்தப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.)

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Ahmedabad bombings: India court sentences 38 to death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X