• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

சுயசரிதை

தொழில்முறையில் நவ்ஜோத் சிங் சித்து கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது பஞ்சாப் மாநில அரசில் சுற்றுலா, கலாச்சார துறை மற்றும் அருங்காட்சியக அமைச்சராக இருக்கிறார். அமிர்தசரஸ் தொகுதியிலிருந்து 2004ம் ஆண்டு பாஜக வேட்பாளராக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் சுரீந்தர் சிங்காவை 77,626 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 லோக்சபா தேர்தலில் சித்து போட்டியிடவில்லை. 2016 ஏப்ரல் மாதம் மோடி அரசு, சித்துவை ராஜ்யசபா எம்.பியாக்கியது. ஆனால் ஜூலை 18ம் தேதி சித்து தனது ராஜ்யசபா எம்.பி பதவியிலிருந்து விலகினார். 2016ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகினார் சித்து. 2017 ஜனவரி மாதம் சித்து, ஆவாஸ் இ பஞ்சாப் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் சித்து காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியிலிருந்து போட்டியிட்டார். இத்தேர்தலில் 42,809 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் நவ்ஜோத் சிங் சித்து
பிறந்த தேதி 20 Oct 1963 (வயது 55)
பிறந்த இடம் பாட்டியாலா, பஞ்சாப்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர், அரசியல்வாதி
தந்தை பெயர் சர்தார் பகவந்த் சிங்
தாயார் பெயர் நிர்மல் சித்து
துணைவர் பெயர் நவ்ஜோத் கெளர் சித்து
துணைவர் தொழில் டாக்டர் - அரசியல்வாதி
மகன்கள் 1
மகள்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி 26, யாதவம்த்ரா காலனி, மெயில் சாலை, பாட்டியாலா, பஞ்சாப்
தற்காலிக முகவரி 110 - அமிர்தசரஸ்
தொடர்பு எண் 9478466666
மின்னஞ்சல் lgtm42@gmail.com
இணையதளம் sherryontopp.com
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

சித்துவின் செல்லப் பெயர் ஷெர்ரி. கிரிக்கெட் வாழ்க்கையின்போது இவரை சிக்ஸர் சித்து என்று அழைப்பார்கள். பேட்டிங்கில் பிரமாதமாக ஆடக் கூடியவர். பீல்டிங்கிலும் பிரமாதமாக செயல்படக் கூடியவர். இதனால் இவருக்கு ஜான்டி சிங் என்ற பெயரும் உண்டு.

சித்துயிசம் என்று கூறப்படும் ஒரு வரி காமெடி பேச்சுக்குப் பெயர் போனவர் சித்து.

முஜ்சே ஷாதி கரோகியா என்ற படத்தில் சித்து நடித்துள்ளார். அதேபோல ஏபிசிடி2 படத்திலும் நடித்துள்ளார். பஞ்சாபி மொழியில் மேரா பிந்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.

அரசியல் காலவரிசை

 • 2017
  இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார் சித்து. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். சுற்றுலா, கலாச்சார துறை மற்றும் அருங்காட்சியக துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 • 2016
  ஏப்ரல் 28ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றார்
 • 2016
  ஜூலை 18ம் தேதி ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்
 • 2013
  காமெடி ஷோக்களுக்கு ஜட்ஜ் ஆக போயுள்ளார். கபில் நடத்தும் காமெடி நைட் ஷோவில் நிரந்தர அழைப்பாளராக இருக்கிறார். அரசியல்வாதியாக மக்களிடம் நல்ல பெயர் இவருக்கு இல்லை. அதேசமயம், இவருக்கு கிரிக்கெட் வீரராக நிறைய ரசிகர்கள் உள்ளனர். காமெடி ஷோக்களில் இவர் பேசும் ஒரு வரி காமெடி வசனங்கள் பிரபலமானவை.
 • 2009
  2009 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமிர்தசரஸ் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்
 • 2007
  இடைத் தேர்தலில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
 • 2004
  லோக்சபா தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியிலிருந்து 2004ம் ஆண்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முந்தைய வரலாறு

 • 1999
  1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். 51 டெஸ்ட், 136 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 7000 சர்வதேச ரன்களையும் அவர் குவித்துள்ளார். 27 முதல் தர செஞ்சுரிகளையும் அவர் விளாசியுள்ளார். மொத்தம் 18 வருடம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்தார்.
 • 1981
  முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் சித்து. அதன் பின்னர் 1983ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பெரும்பாலும் அவர் டாப் ஆர்டரில்தான் விளையாடுவது வழக்கம்.
நிகர மதிப்பு45.37 CRORE
சொத்துக்கள்45.91 CRORE
கடன்கள்54.25 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

ஆல்பம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more