1923ம் ஆண்டு சங்கரன்- அக்கம்மா தம்பதிக்கு மகனாக ஆலப்புழாவில் பிறந்தார் அச்சுதானந்தன். இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்தார். படிப்பையும் பாதியில் விட நேரிட்டது. 11வது வகுப்பு வரை மட்டுமே அவர் படித்துள்ளார். ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து தனது தம்பியையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் அச்சுதானந்தன். அதுதான் அவரை அரசியலுக்கு இழுத்து வர முக்கியக் காரணமாக அமைந்தது. மக்கள் தலைவராக அவர் பின்னர் உருவெடுத்தார். அரசியலில் அவர் தனி முத்திரை பதித்தார். கேரள முதல்வராக 2006 முதல் 11 வரை பதவியில் இருந்தார். 2011ல் எதிர்க்கட்சித் தலைவரானார். இளம் வயதிலிருந்தே ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தவர் அச்சுதானந்தன். ஊழலுக்கு எதிரானவர். எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுபவர். எளிமை விரும்பி. விவசாயிகளின் பிரச்சினைக்காக முன்நின்று குரல் கொடுப்பவர். சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இதற்காக 1946ம் ஆண்டு சிறைக்குப் போயுள்ளார். கேரளாவில் 1970ல் நடந்த நில உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டார். 1967ம் ஆண்டு இஎம்எஸ் நம்பூதிரிபாட் அரசு கொண்டு வந்த நில சீர்திருத்தசட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
| முழுப் பெயர் | வி.எஸ்.அச்சுதானந்தன் |
| பிறந்த தேதி | 20 Oct 1923 (வயது 102) |
| பிறந்த இடம் | ஆலப்புழா |
| கட்சி பெயர் | Communist Party Of India (marxist) |
| கல்வி | 5th Pass |
| தொழில் | சமூக சேவை |
| தந்தை பெயர் | சங்கரன் |
| தாயார் பெயர் | அக்கம்மா |
| துணைவர் பெயர் | கே.வசுமதி |
| துணைவர் தொழில் | ஓய்வூதியர் (அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்) |
| குழந்தைகள் | 1 மகன்(கள்) 1 மகள்(கள்) |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.