Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜீத் ஜோகி

அஜீத் ஜோகி
அஜீத் குமார் ஜோகி சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ஆவார். 2000ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2003 டிசம்பர் வரை அவர் முதல்வராக பதவி வகித்தார்.
By Keshav Karna | Sunday, January 31, 2021, 12:10:50 PM [IST]

அஜீத் ஜோகி சுயசரிதை

அஜீத் குமார் ஜோகி சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ஆவார். 2000ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2003 டிசம்பர் வரை அவர் முதல்வராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக இருந்த அவர் பின்னர் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் அஜீத் ஜோகி மற்றும் அவரது மகன் அமித் ஜோகி ஆகியோர் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அன்டகார் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தனர். அவரது மகன் அமித் ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க

அஜீத் ஜோகி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அஜீத் ஜோகி
பிறந்த தேதி 29 Apr 1946
இறந்த தேதி 29 May 2020 (வயது 74)
பிறந்த இடம் பிலாஸ்பூர், பெரார், சட்டிஸ்கர்.
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் பொறியாளர், இந்திய ஆட்சி பணி அதிகாரி
தந்தை பெயர் கேபி ஜோகி
தாயார் பெயர் காந்தி மணி
துணைவர் பெயர் ரேணு ஜோகி
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்)

அஜீத் ஜோகி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹4.55 CRORE
சொத்துக்கள்
₹4.55 CRORE
கடன்கள்
N/A

அஜீத் ஜோகி சுவாரசிய தகவல்கள்

மாவட்ட ஆட்சியரின் பணி மற்றும் நிர்வாகத்தின் அங்கங்கள் என்ற தலைப்பில் அவர் நூல்களை எழுதியுள்ளார்.
போபால் மௌலானா ஆசாத் காலேஜ் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கப் பதக்கம் பெற்றார்.
அஜீத் ஜோகி 1981-85இல் இருந்து இந்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.

அஜீத் ஜோகி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018 : அஜித் ஜோகி ராஜ்நாந்த்கான் மற்றும் மார்வஹி தொகுதிகளிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
  • 2016 : அஜித் ஜோகி 2016ம் ஆண்டு ஜூன் மாதம் சத்தீஸ்கரில் ஜனதா காங்கிரஸ் என்ற ஒரு புதிய அரசியல் கடசியை நிறுவினார்.
  • 2009 : 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகாசமுந்த் தொகுதியில் வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜோகி தனது தொகுதியைத் தக்கவைக்கத் தவறினார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான சண்டே லால் சாகுவிடம் 133 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
  • 2008 : மர்வாஹி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004 : சத்தீஷ்கரின் மகாசமுந்த் தொகுதியில் இருந்து பதினான்காவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2000 : 2000ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2003 ல் சட்டிஸ்கர் முழுவதிலும் விகாஸ் யாத்ரா என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார்
  • 1999 : சட்டிஸ்கர் தனி மாநிலம் கோரி தண்டேவாடாவில் உள்ள மா தண்டீஸ்வரி கோவிலிலிருந்து அம்பிகாபூரில் உள்ள மஹாமயா கோவில் வரை பேரணி நடத்தினார்
  • 1998 : சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கார் தொகுதியில் இருந்து 12 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1997 : டெல்லி பிரதேச காங்கிரஸ் தேர்தல் பிரிவு மேற்பார்வையாளர். காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்து, சுற்றுலா குழு உறுப்பினர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு உறுப்பினர் குழு, ஆலோசனைக் குழு, நிலக்கரி அமைச்சு, பொதுக் கணக்குக் குழு ஆகியவற்றில் உறுப்பினர். எரிசக்தி, ஒருங்கிணைப்பாளர் குழு, மறைமுக வரிகள் மீதான துணைக் குழுவில் உறுப்பினர். மாநிலங்களவை துணைத் தலைவரின் ஆலோசனைக் குழு உறுப்பினர். 1997 முதல் 1999 வரை காங்கிரஸ் கட்சியின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர்.
  • 1996 : லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டடக் குழு உறுப்பினரானார். நாடாளுமன்ற காங்கிரஸ் செயல் குழு உறுப்பினர்
  • 1995 : அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
  • 1995 : சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1989 : மணிப்பூர் மாநில தொகுதிகளுக்கான காங்கிரஸ் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு பழங்குடிப் பகுதிகளில் கிட்டத்தட்ட 1500 கி.மீ. தொலைவுக்குப் பயணித்து காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும், ஆதரவு திரட்டவும் செய்தார்.
  • 1987 : மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பொது குழுவின் உறுப்பினர், ரயில்வே குழு தலைவர், மாநில எஸ் சி மற்றும் எஸ் டி ஆணையத்தின் (மத்திய பிரதேசம்) உறுப்பினர்
  • 1986 : 1986 ஆம் ஆண்டு ஜோகி அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்கவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவர் 1998 வரை 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.

முந்தைய வரலாறு

  • 1974: ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் பணிகளுக்கு அஜீத் ஜோகி தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி, ஷாதோல், ரெய்ப்பூர், இந்தூர் மாவட்ட கலெக்டராக நீண்ட காலம் அதாவது 12 வருடம் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். 1974 முதல் 1986 வரை கலெக்டராக அவர் இந்த மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
  • 1968: போபால் மௌலானா ஆசாத் காலேஜ் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் தங்க பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். கல்லூரி காலத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1967: ராய்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக 1967-68 ஆண்டில் பணிபுரிந்தார்.

அஜீத் ஜோகி சாதனைகள்

1984-ல் ஜெயன்ட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு மிகச் சிறந்த மனிதர் விருதினை அஜீத் ஜோகிக்கு வழங்கியது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+