அஜீத் சிங்

அஜீத் சிங்
ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண் சிங்-ன் மகன் ஆவார். 1987 மற்றும் 1988 காலகட்டத்தில் லோக் தல் (ஏ) மற்றும் ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.
By Keshav Karna | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

அஜீத் சிங் சுயசரிதை

ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண் சிங்-ன் மகன் ஆவார். 1987 மற்றும் 1988 காலகட்டத்தில் லோக் தல் (ஏ) மற்றும் ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவிவகித்துள்ளார். ஃபாக்பட் தொகுதியில் இருந்து ஆறு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இவர், 1989 ஆம் ஆண்டு முதல்முறையாக கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1995, 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கேபினட் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க

அஜீத் சிங் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அஜீத் சிங்
பிறந்த தேதி 12 Feb 1939
இறந்த தேதி 06 May 2021 (வயது 82)
பிறந்த இடம் படோலா, மீரட் மாவட்டம் (உத்திரப் பிரதேசம்)
கட்சி பெயர் Rashtriya Lok Dal
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் லேட்.சிஎச். சரண் சிங்
தாயார் பெயர் திருமதி.காயத்ரி தேவி
துணைவர் பெயர் ராதிகா சிங்
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)

அஜீத் சிங் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹16.93 CRORE
சொத்துக்கள்
₹16.93 CRORE
கடன்கள்
N/A

அஜீத் சிங் சுவாரசிய தகவல்கள்

2019 நாடாளுமன்ற தேர்தலில் முசாபர்நகர் தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தல் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அஜீத் சிங் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2011 : மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரானார்
  • 2009 : லோக்சபாவில் ராஷ்டிரிய லோக் தல் பாராளுமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2009 : பாக்பட் தொகுதியில் இருந்து ஆறாவது முறையாக 15 ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2004 : பாக்பட் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக 14 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜீத்சிங், அங்கு 220638 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி வேட்பாளர் ஆலாத் அலியை தோற்கடித்தார்
  • 2001 : மத்திய விவசாயத்துறை அமைச்சரானார்
  • 1999 : ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1999 : நான்காவது முறையாக 13 வது மக்களவைக்கு மீண்டும் ஃபாக்பட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பா.ஜ.வின் சோம்பால்-ஐ 1,54,419 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1997 : 8 பிப்ரவரி 1997 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் 11 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1996 : மூன்றாவது முறையாக 11 மக்களவைக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்வான அஜீத்சிங், காங்கிரஸ் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 9.9.1996 அன்று விலகினார்
  • 1995 : மத்திய உணவுத்துறை அமைச்சரானார்
  • 1991 : இரண்டாவது முறையாக 10 வது மக்களவைக்கு தேர்வான அஜீத்சிங், காங்கிரஸ் கட்சியின் ஜீல் சிங்கை 1,97,108 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
  • 1989 : தொழில்துறை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்
  • 1989 : ஜனதா தல் வேட்பாளராக ஃபாக்பட் தொகுதியில் இருந்து 9 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அஜீத்சிங், அங்கு 244647 வாக்குகளின் வித்தியாசத்தில் காங்கிரஸின் மகேஷ் ஷர்மாவை தோற்கடித்தார்.
  • 1989 : ஜனதா தல் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1988 : ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1987 : லோக்தல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1986 : ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜீத் சிங்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+