முகப்பு
 » 
அனந்திபென் எம் பட்டேல்

அனந்திபென் எம் பட்டேல்

அனந்திபென் எம் பட்டேல்

அனந்திபென் பட்டேல் 1941 ஆம் ஆண்டு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் விஜபூர் தாலுகாவில் உள்ள கரோட் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜெதாபாய் ஆசிரியராக இருந்தார்.

அனந்திபென் எம் பட்டேல் சுயசரிதை

அனந்திபென் பட்டேல் 1941 ஆம் ஆண்டு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் விஜபூர் தாலுகாவில் உள்ள கரோட் கிராமத்தில் பிறந்தார்.அவரது தந்தை ஜெதாபாய் ஆசிரியராக இருந்தார். 'லட்சுமி' யை (செல்வத்தின் தேவி) விட 'சரஸ்வதி' யின் (விவேகத்தின் தேவி) முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குடும்பத்தில் பிறந்தார். அனந்தி பென் பட்டேல் ஒரு அரசியல்வாதி மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில தற்போதைய ஆளுநராகவும் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தார். அவர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக இருந்தார். அவர் 1987 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார். 2018 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கூடுதல் பொறுப்பேற்று இருந்த ஓம் பிரகாஷ் கோலிக்கு பதிலாக மத்தியப் பிரதேச கவர்னர் பதவிக்கு தேர்ந்தெடுக்க பட்டார்.

மேலும் படிக்க
By Ajay M V Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

அனந்திபென் எம் பட்டேல் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அனந்திபென் எம் பட்டேல்
பிறந்த தேதி 21 Nov 1941 (வயது 82)
பிறந்த இடம் கரோட்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி, ஆசிரியர்
தந்தை பெயர் ஜெதாபாய் பட்டேல்
தாயார் பெயர் மெனபென் பட்டேல்
துணைவர் பெயர் மாபட்லால் பட்டேல்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
நிரந்தர முகவரி தர்மா பார்ம், ஷிலாஜ் தாலுகா, டஸ்கரோய்
தற்காலிக முகவரி தகவல் இல்லை
தொடர்பு எண் NA
மின்னஞ்சல் NA
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

அனந்திபென் எம் பட்டேல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹1.82 CRORE
சொத்துக்கள்:₹1.82 CRORE
கடன்கள்: N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

அனந்திபென் எம் பட்டேல் சுவாரசிய தகவல்கள்

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பள்ளியில் படித்தபோது, மூன்று மாணவிகள் மட்டுமே உள்ள என்.எம்.உயர்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு படித்தார். ஒரு தடகள வீரராக இருந்த அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாவட்ட அளவில் சாம்பியன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். மெஹசனாவிலேயே சிறந்த தடகள வீரருக்கான "வீர பாலா" விருது அவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டுக்காக மஹிலா விகாஸ் க்ருஹில் பணிபுரிந்த போது அங்கு அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட விதவைகளுக்கு தொழிற்பயிற்சியை கற்பித்தார்.

அனந்திபென் எம் பட்டேல் அரசியலில் கடந்து வந்த பாதை

2018
  • 2016ம் ஆண்டு ஓம் பிரகாஷுக்குப் பதில் மத்தியப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டிஸ்கர் மாநில ஆளுநர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அந்த மாநில ஆளுநர் பல்ராம் தாஸ் டாண்டன் மறைவைத் தொடர்ந்து கூடுதலாக இதையும் கவனித்தார்.
2017
  • 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனந்தி பென் போட்டியிடவில்லை. அவரது இடத்தில், பட்டேல் புபண்தரேபாய் ரஜினிகன்த் கட்லோடியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014
  • குஜராத் மாநிலத்தின் பதினைந்தாவது முதலமைச்சராக பட்டேல் பதவியேற்றார். குஜராத்தின் முதல் பெண் முதலமைச்சர் பட்டேல் ஆவார். 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பிறகு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இப்பதவியில் வகித்து வந்தார்.
2012
  • 2012ம் ஆண்டு தேர்தலில் கெட்லோடியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 175,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டேல் ரமேஷ்பாய் பிரஹல்பாய் (துத்வாலா) தோற்கடித்தார். அவர் சாலை மற்றும் கட்டிடம், வருவாய், நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற வீடுகள், பேரழிவு மேலாண்மை மற்றும் மூலதன திட்டங்கள் சார்ந்த துறையில் அமைச்சராக தொடர்ந்தார்.
2007
  • காங்கிரஸ் கட்சியின் காந்திலால் நானாலால் படேல்லை தோற்கடித்தன் மூலம் பதான் தொகுதியிலிருந்து குஜராத் சட்டசபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கேபினட் அமைச்சராகவும், மூன்றாவதாக தேர்ந்தெடுக்கபட்ட போது சாலைகள் மற்றும் கட்டிடம் மற்றும் வருவாய் துறையில் நியமிக்கப்பட்டார்.
2002
  • பட்டேல் தனது இரண்டாவது சட்டசபை தேர்தலில் பதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் காந்திலால் நானலால் படேல்லை தோற்கடித்தார். மேலும், அவர் இரண்டாவது முறையாக கல்வி அமைச்சராக அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றினார்.
1998
  • அனந்தி பென் பட்டேல், மண்டல் சட்டமன்ற தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலமைச்சர் கேசுபாய் பட்டேலின் கீழ் கல்வி அமைச்சராக பதவியேற்றார்.
1994
  • குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் 1994-95 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நான்காவது உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
1992
  • பட்டேலின் முதல் குறிப்பிடத்தக்க பணி, விரம்கம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியபோது உள்ளூர் குடிமக்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் சில வாரங்கள் செலவிட்டதோடு அரசாங்க அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டு முடுக்கி விட்டார்.
1987
  • பள்ளியில் சுற்றுலா சென்ற போது சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தில் குதித்த இரண்டு பெண்களை காப்பாற்றியதற்காக அவருக்கு ஜனாதிபதி விருதை வழங்கினார். அப்போதே அவர் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார். பட்டேலின் வீரச் செயலால் ஈர்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு அவர் கட்சியில் சேர்வதற்கு பரிந்துரை செய்தது. முதலில், அவர் கட்சியில் சேர்வதற்கு தயக்கம் காட்டினார். ஆனால் நரேந்திர மோடி மற்றும் கேசுபாய் படேல் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, அவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் மோர்ச்சாவின் தலைவராக செயல்பட்டார்.

முந்தைய வரலாறு

1967
  • பட்டேல் 1967 முதல் 1970 வரை அகமதாபாத்தில் உள்ள மோஹினிபா கன்ய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தார். பின்னர், அவர் பள்ளி முதல்வராக ஆனார்.

அனந்திபென் எம் பட்டேல் சாதனைகள்

1988ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான குஜராத் ஆளுநரின் விருதை பெற்றார். 1989ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருதையும் 1999ம் ஆண்டு மும்பையின் பட்டேல் ஜக்ருதி மண்டல் ன் சர்தார் பட்டேல் விருதும் பெற்றுள்ளார். ஸ்ரீ டபோதன் பிரம்மன் விகாஸ் மண்டல் வித்யா கௌரவ் விருது 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. மற்றும் பட்டேல் சமுதாயத்தால் 2005ம் ஆண்டு 'பாடிடர் ஷிரோமணி' விருதும் பெற்றார். மேலும், நர்மதாவில் நவகாம் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய மோஹினாபா பள்ளியின் இரண்டு பெண்களை காப்பாற்றினார். ஆகையால் வீர விருது வழங்கப்பட்டது. அஹமதாபாத், சாருமதி யோதா விருது (ஜோதி சங்க்) விருதும் பெற்றுள்ளார். அம்பூபாய் புராணி வையயம் வித்யாலே விருதையும் (ராஜ்பீப்பால) பெற்றுள்ளார் .
மகளிர் மேம்பாட்டு பிரச்சாரத்திற்காக தாரதி விகாஸ் மண்டலத்தால் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மஹெசானா மாவட்ட பள்ளி விளையாட்டு நிகழ்வில் முதலிடத்தை பெற்றதற்காக 'வீர்பலா' விருது வழங்கப்பட்டது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X