Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனந்த் குமார்

ஆனந்த் குமார்
அனந்த் குமார் ஒரு இந்திய அரசியல் தலைவர், சமூக சேவகர். வர்த்தகர், மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்.
By Shalini | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஆனந்த் குமார் சுயசரிதை

அனந்த் குமார் ஒரு இந்திய அரசியல் தலைவர், சமூக சேவகர். வர்த்தகர், மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர். பாரதிய ஜனதா கட்சி மூலம் பெங்களூரில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது மக்களவை உறுப்பினர் ஆவார். கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தவர். 1996ஆம் ஆண்டு மக்களவையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முக்கிய அமைச்சர் பொறுப்பு வகித்தவர். 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் கெமிக்கல் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சராகவும், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் நரேந்திர மோடி அரசாங்கத்தில் பணியாற்றியவர்.

மேலும் படிக்க

ஆனந்த் குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஆனந்த் குமார்
பிறந்த தேதி 22 Jul 1959
இறந்த தேதி 12 Nov 2018 (வயது 59)
பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் சமூக சேவகர்
தந்தை பெயர் திரு. ஹெச். என். நாராயண சாஸ்திரி
தாயார் பெயர் திருமதி. கிரிஜா என். சாஸ்திரி
துணைவர் பெயர் திருமதி. தேஜஸ்வினி ஆனந்த் குமார்
குழந்தைகள் 2 மகள்(கள்)
இணையதளம் http://ananth.org/

ஆனந்த் குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹4.23 CRORE
சொத்துக்கள்
₹4.52 CRORE
கடன்கள்
₹28.83 LAKHS

ஆனந்த் குமார் சுவாரசிய தகவல்கள்

சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளான அன்னபூரனா, ஆதா பாத்தா போன்றவற்றில் ஆர்வமாக பங்கு பெற்றார்.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நன்கு சரளமாக பேசக் கூடியவர். அரசியல் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் பற்றி திறம்பட பேசக் கூடியவர்.

படித்தல், எழுதுதல், கவிதை மற்றும் பயணம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார்.

குழந்தைகளுடன் விளையாடுவது மற்றும் நட்சத்திரம் பார்ப்பதை பொழுது போக்காக கொண்டிருந்தார்.

கிரிக்கெட், பூப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்.

ஆனந்த் குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: 2018ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி திங்கட்கிழமை காலை 2 மணியளவில், மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
  • 2016: அனந்த குமாருக்கு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
  • 2014: 2014ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற கட்சி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2014: அனந்த் குமார் மீண்டும் பெங்களூரில் (தெற்கு ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வலுவான வேட்பாளர் நந்தன் நிலகேனியை தோற்கடித்தார். பின்னர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வேதி மற்றும் உரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் உறுப்பினராகவும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2013: பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக 2013 ஆகஸ்ட் 16 முதல் தனது மரணம் வரை இருந்து வந்தார்.
  • 2012: 67வது ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொண்ட இந்தியக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றார். 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் கன்னடத்தில் பேசினார். ஐ..நா சபையில் கன்னடத்தில் பேசிய முதல் இந்தியர் என்ற பெயரும் இவருக்குக் கிடைத்தது.
  • 2010: 2010 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி உலக விவகாரக் கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய-போர்ச்சுக்கல் பாராளுமன்ற நட்புக் குழு உறுப்பினராக 29 ஜூலை 2010ல் பொறுப்பேற்றார்.
  • 2008: 2008-2010ல் பெங்களூர் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவாரானார்.
  • 2004: 2004முதல் 2009வரை பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டார்.
  • 2004: 2004 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த பாடுபட்டார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி அனந்த் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வேதி மற்றும் உரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2003: கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக 2003 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டில் நடந்த கர்நாடக சட்டசபை தேரத்லில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும் 2004 லோக்சபா தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக அதிக தொகுதிகளையும் வென்றது.
  • 1999: 1999ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக உருவெடுத்தார். சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், கலாச்சாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற அமைச்சகங்களை அவர் கையாண்டார். 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூரில் உள்ள ஏரோஸ்பேஸ் மியூசியம் சொசைட்டியின் நிறுவன தலைவராக இருந்தார். சீனாவுக்குச் சென்ற இந்திய பாராளுமன்ற குழுவிலும் அவர் இடம் பெற்றார்.
  • 1998: 1998ல் காங்கிரஸ் கட்சியின் டி.பி. ஷர்மாவைத் தோற்கடித்தார். பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சரவையில் இவர்தான் இளம் அமைச்சர் ஆவார். 1988ம் ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்புக்கான செயல் திட்டக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றார். சர்வதேச பரிமாற்றத் திட்டத்தில் உறுப்பினராக இடம் பெற்றார். வாஷிங்டனில் 1998ம் ஆண்டு நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்வின்போது இந்தியாவின் சிறப்புத் தூதராக கலந்து கொண்டு மூவர்ணக் கொடியேற்றினார்.
  • 1997: 1997ஆம் ஆண்டு நடந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 1996: 1996 முதல் 2016 வரை பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில் மொத்தம் 20 வருடங்கள் உறுப்பினராக செயல்பட்டுள்ளார். மேலும் இந்தத் தொகுதியை பாஜக 1991 முதல் 2016 வரை மொத்தம் 25 வருடங்கள் தன்வசம் வைத்திருந்தது. மத்திய தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை ஒரு வருடம் அவர் வகித்தார்.
  • 1996: அனந்தகுமார் பாஜகவில் இணைந்தார். மாநில பாஜக இளைஞர் அணியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1996ம் ஆண்டு தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பெங்களூரு தெற்கு லோகச்பா தொகுதிக்கு 11வது லோக்சபா தேர்தலின்போது 1996ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வரலட்சுமி குண்டுராவைத் தோற்கடித்தார். மத்திய சில்க் போர்டு உறுப்பினராக 1996-97ல் பதவி வகித்தார். யுனெஸ்கோவுக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவில் இவரும் இடம் பெற்றார். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக 1996 முதல் 98 வரை பதவி வகித்தார்.
  • 1993: நரேந்திர மோடியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற குழுவில் அனந்தகுமாரும் இடம் பெற்றார்.
  • 1983-86: 1983ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த அஸ்ஸாமை பாதுகாப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். 1986ம் ஆண்டு கர்நாடகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய வறட்சி நிவாரணக் குழுவில் இடம் பெற்று செயல்பட்டார். 1985ம் ஆண்டு சர்வதேச இளைஞர் தின கொண்டாட்டக் குழுவில் இடம் பெற்றார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற ஸ்டடி முகாம்களில் இடம் பெற்றார். பல்வேறு மாநில, பல்கலைக்கழக அளவிலான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
  • 1982: 1982 முதல் 85 வரை அவர் கர்நாடகா, அகில பாரதிய வித்யாரதி பரிஷத்தின் (ஏபிவிபி) செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1975-77: 1975-77ல் இந்தியாவில் அவசர நிலை அமலில் இருந்தபோது ஜேபி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். 40 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

ஆனந்த் குமார் சாதனைகள்

நூறு சதவிகிதம் வேம்பினை அடிப்படையாக கொண்ட யூரியா உரத்தை ஊக்குவித்ததன் மூலம் இந்திய உரத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திநார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி சுவிதா-சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் நாப்கின்களை வெறும் ரூ. 2.50 க்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் கூட ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

சாமானிய மக்களுக்கு உதவக் கூடிய வகையிலான ஜன் அவுசாதி கேந்திர மையங்களை உருவாக்கி அதன் மூலம் அனைவருக்கும் தரமான சுகாதாரத் திட்டங்கள் கிடைக்க உதவினார்.

இதய மற்றும் மூட்டு மாற்று சாதனங்களுக்கான விலையைக் குறைத்து மக்களுக்கு உதவினார். அரசுக்கும் இதில் சேமிப்பு கிடைத்தது.

1993ம் ஆண்டு நரேந்திர மோடியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற குழுவில் இடம் பெற்றிருந்தார். பெங்களூர் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராக 2008 முதல் 2010 வரை பொறுப்பு வகித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+