முகப்பு
 » 
க.அன்பழகன்

க.அன்பழகன்

க.அன்பழகன்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான க. அன்பழகன், தமிழகத்தின் முன்னாள் நிதி மற்றும் கல்வி அமைச்சராவார்.

க.அன்பழகன் சுயசரிதை

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான க. அன்பழகன், தமிழகத்தின் முன்னாள் நிதி மற்றும் கல்வி அமைச்சராவார். கலைஞர் மு.கருணாநிதிக்கு நெருக்கமானவரும், பிரபல திராவிட இயக்க தலைவருமான இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொதுச்செயலாளர் ஆவார். இவர் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்திற்கு ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "பேராசிரியர்" என பிரபலமாக அறியப்படும் க.அன்பழகன், தனது கட்சி தொண்டர்களால் 'இனமான பேராசிரியர்' என குறிப்பிடப்படுகிறார்.

மேலும் படிக்க
By Administrator Updated: Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

க.அன்பழகன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் க.அன்பழகன்
பிறந்த தேதி 19 Dec 1922
இறந்த தேதி 07 Mar 2020 (வயது 97)
பிறந்த இடம் காட்டூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி Post Graduate
தொழில் பேராசிரியர்
தந்தை பெயர் எம். கல்யாணசுந்தரனார்
தாயார் பெயர் சுவர்ணாம்பாள்

க.அன்பழகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹1.48 CRORE
சொத்துக்கள்:₹1.48 CRORE
கடன்கள்: N/A

க.அன்பழகன் சுவாரசிய தகவல்கள்

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருக்கும் இவரது படைப்புகள், கலைஞர் கருணாநிதியின் படைப்புகளை போலவே சிறப்பானவை. இவர் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

க.அன்பழகன் அரசியலில் கடந்து வந்த பாதை

2011
  • சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் அன்பழகன் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
2006
  • மீண்டும் துறைமுகம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் அவரது கட்சி மாநிலத்தை ஆட்சி செய்ய தேவையான பெரும்பான்மையை பெற்றது. 2006-2011 காலகட்டத்தில் நிதியமைச்சராக பணியாற்றினார்.
2001
  • 2001 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் துறைமுகம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரது கட்சிக்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை.
1996
  • 1996 ஆம் ஆண்டு தேர்தலில் இவரது கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் இவர் சென்னை துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 முதல் 2001 வரை முழுமையாக நடைபெற்ற இந்த ஆட்சியில் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.
1991
  • ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 1991 சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்டது. சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அன்பழகன் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
1989
  • 1989தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1991 ஜனவரி 31 அன்று இந்திய பிரதமரால் அந்த அரசாங்கம் கலைக்கப்பட்டது. செய்யப்பட்டது. 1976 க்குப் பிறகு இரண்டாவது முறையாக திமுக அரசு கலைக்கப்பட்டது. அதுதொடர்பாக பெரும் சர்ச்சைகள் நிலவியது.
1984
  • இம்முறை சென்னை பூங்கா நகர் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்வானார். பின்னர் தமிழீழ பிரச்சினையை முன்னெடுத்துச் சென்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
1980
  • மீண்டும் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977
  • 1977 ல் திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போராசிரியர், இன்று வரை அப்பொறுப்பில் இருந்துவருகிறார்.
1977
  • 1977 தேர்தலில் புரசைவாக்கம் சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ. ஆனார்.
1971
  • மீண்டும் 1971 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வான பேராசிரியர், இம்முறை மாநில சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
1967
  • 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார் பேராசிரியர்.
1962
  • 1962-1967 காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டார் பேராசிரியர் க.அன்பழகன்.

க.அன்பழகன் சாதனைகள்

விடுதலை கவிஞர், தமிழ்கடல், அலை ஓசை, தமிழர் திருமணமும் இனமானமும், உரிமை வாழ்வு மற்றும் பேசும் கலை வளர்ப்போம் உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார் க.அன்பழகன்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X