அருண் ஜேட்லி வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மிாறியவர். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ளார். நிதி, கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக அவர் இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்கத வழக்கறிஞராக இருந்தவர். 1975ல் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக அவசர நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார்.. அப்போது அவர் யுவ மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வாஜ்பாய் அரசிலும் அமைச்சராக இருந்தவர் ஜேட்லி. மோடி அரசில் பாதுகாப்புத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார் ஜேட்லி. 2009 -2019 வரையிலான கால கட்டத்தில் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜேட்லி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
| முழுப் பெயர் | அருண் ஜேட்லி |
| பிறந்த தேதி | 28 Dec 1952 |
| இறந்த தேதி | 24 Aug 2019 (வயது 66) |
| பிறந்த இடம் | புது டெல்லி |
| கட்சி பெயர் | Bharatiya Janta Party |
| கல்வி | Graduate Professional |
| தொழில் | வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் |
| தந்தை பெயர் | மகராஜ் கிஷன் ஜேட்லி |
| தாயார் பெயர் | ரத்தன் பிரபா ஜேட்லி |
| துணைவர் பெயர் | சங்கீதா டோக்ரா |
| துணைவர் தொழில் | தகவல் இல்லை |
| குழந்தைகள் | 1 மகன்(கள்) 1 மகள்(கள்) |
| இணையதளம் | https://www.arunjaitley.com/ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.