• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் பிஹாரி வாஜ்பாய்

சுயசரிதை

அடல் பிஹாரி வாஜ்பாய் காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு பிரதமர் 5 ஆண்டு காலம் பதவியை வகித்து முடித்த முதல் பிரதமர் ஆவார். கார்கில் யுத்தத்தின் துயரங்களில் இருந்து நாட்டை வழிநடத்தியவர். 1999 ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் 1996 மற்றும் 1998ல் பிரதமராக அவர் பதவி வகித்திருந்தார். வாஜ்பாய் 1924 ல் குவாலியரில் பிறந்தார். அவர் தனது இளமை காலத்தில் ஒரு மார்க்சிஸ்டாக இருந்தார். ஆனால் அதன் கொள்கைகளை விட்டு விலகி ஆர்.எஸ்.எஸ், அமை்பபில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். 1951ம் ஆண்டு ஜன சங் கட்சியைத் தொடங்கினார். அவசரகாலச் சட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸைத் தோற்கடித்து பின்னர் 1979 ல் தேர்தலில் வெற்றிபெற்ற அவரது கட்சி கூட்டணியை அமைத்த பின் அவர் வெளி விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் குறுகியகாலமே இவர் அமைச்சராக செயல்பட்டார்.

தனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தவர் வாஜ்பாய். சில நேரங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளிலிரு்ந்தும் அவர் மாறுபட்டுள்ளார். பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த அவர் முயன்றார். ஆனால் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே அதை விரும்பவில்லை. குஜராத் கலவரத்தைத் தடுக்க அவர் மோடியை முயற்சித்தபோது அது முடியாமல் போனது. கவிதைகளில் சிறந்து விளங்கியவர் வாஜ்பாய். தனது கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் இதழிலும் அவர் எழுதியுள்ளார். 2018ம் ஆண்டு தனது 93வது வயதில் வாஜ்பாய் மரணமடைந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அடல் பிஹாரி வாஜ்பாய்
பிறந்த தேதி 25 Dec 1924
இறந்த தேதி 16 Aug 2018 (வயது 93)
பிறந்த இடம் குவாலியர், மத்தியபிரதேசம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி
தொழில் பத்திரிகையாளர், சமூக சேவகர்
தந்தை பெயர் திரு கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்
தாயார் பெயர் கிருஷ்ண தேவ்
துணைவர் பெயர் தகவல் இல்லை
துணைவர் தொழில் தகவல் இல்லை

தொடர்பு

நிரந்தர முகவரி 10, மால் அவென்யூ, லக்னோ, உத்திரபிரதேசம் - 226001
தற்காலிக முகவரி 6-ஏ, கிருஷ்ண மேனன் மார்க், புது தில்லி -110011
தொடர்பு எண் NA
மின்னஞ்சல் NA

சுவாரஸ்ய தகவல்கள்

வாஜ்பாய் 1995 ஆம் ஆண்டில் "மி எக்யவன் கவிதாயேன்" மற்றும் 2001 ஆம் ஆண்டில் "21 கவிதைகள்" என்னும் நூல்களை வெளியிட்டார்.

அரசியல் காலவரிசை

  • 2004
    லக்னோவில் இருந்து பதினான்காவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1999
    லக்னோவிலிருந்து பதிமூன்றாவது மக்களவைக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கரன் சிங்கைத் தோற்கடித்து தேர்வு பெற்றார்.
  • 1999
    இந்தியாவின் பிரதமர் (13 அக்டோபர் 1999-மே 2004) மற்றும் அமைச்சர்கள் துறைகள் ஆகியவற்றின் பொறுப்பாகவும் எந்த அமைச்சரின் பொறுப்பிற்கும் ஒதுக்கப்படவில்லை
  • 1998
    லக்னோவிலிருந்து பனிரெண்டாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1998
    இந்திய பிரதமர் (1998-99) மற்றும் வெளிவிவகார அமைச்சர்; மேலும் எந்த அமைச்சரின் பொறுப்பிற்கும் ஒதுக்கப்படாத அமைச்சர்கள் துறைகள் ஆகியவற்றையும் ஒதுக்கப்பட்டது.
  • 1997
    வெளிவிவகாரக் குழுவின் தலைவர்.
  • 1996
    லக்னோவில் இருந்து பதினொன்றாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது 52% வாக்குகள் கிடைத்தன.
  • 1996
    1996ம் ஆண்டு மே 16 முதல்1996 ம் ஆண்டு மே 31 வரை இந்திய பிரதமர்.
  • 1996
    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
  • 1993
    வெளிவிவகாரக் குழுவின் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்.
  • 1991
    மத்திய பிரதேசத்தில் வித்ஷா தொகுதியிலிருந்து பத்தாவது மக்களவைக்கு 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரகாஷ் ஷர்மாவை தோற்கடித்ததன் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991
    பொது கணக்குக் குழுவின் தலைவர்
  • 1990
    மனுக்கள் குழுவின் தலைவர்.
  • 1988
    பொது நோக்கங்கள் குழு உறுப்பினர், ஹவுஸ் கமிட்டி உறுப்பினர், வர்த்தக ஆலோசனை குழு உறுப்பினர்.
  • 1986
    இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1980
    48% வாக்குகளைப் பெற்று புது தில்லியிலிருந்து ஏழாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1980
    பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி). தலைவர்
  • 1977
    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஷிபூசனை 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து புது தில்லியிலிருந்து ஆறாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1977
    மத்திய வெளிவிவகார துறை அமைச்சர்.
  • 1977
    நிறுவனர் -உறுப்பினர், பாரதீய ஜனதா கட்சி.
  • 1971
    குவாலியரில் இருந்து ஐந்தாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அங்கு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கௌதம் ஷர்மாவை தோற்கடித்தார்.
  • 1968
    தலைவர் -பாரதிய ஜன சங்கம்
  • 1966
    அரசு உத்தரவாத குழுவின் தலைவர்.
  • 1962
    மாநிலங்களவை உறுப்பினர்.
  • 1957
    உத்தரப்பிரதேசத்தின் பாலக்பூர் தொகுதியிலிருந்து இரண்டாவது மக்களவைக்கு 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
  • 1957
    தலைவர், பாரதீய ஜன சங் நாடாளுமன்றக் கட்சி
  • 1951
    நிறுவனர்- உறுப்பினர் பாரதிய ஜன சங்கம் (பி.எஸ்.எஸ்.).
நிகர மதிப்புN/A
சொத்துக்கள்N/A
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more