Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்லப் குமார் தேவ்

பிப்லப் குமார் தேவ்
திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதி, திரிபுரா மாநில முதல்வராக இருக்கிறார் பிப்லப் தேவ். கடந்த 2016 ஜனவரி 7ம் தேதி முதல் திரிபுரா மாநில பாஜக தலைவராகவும் இருந்து வருகிறார்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

பிப்லப் குமார் தேவ் சுயசரிதை

திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதி, திரிபுரா மாநில முதல்வராக இருக்கிறார் பிப்லப் தேவ். கடந்த 2016 ஜனவரி 7ம் தேதி முதல் திரிபுரா மாநில பாஜக தலைவராகவும் இருந்து வருகிறார். 2018ல் நடந்த திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 25 வருட காலமாக நீடித்து வந்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக. பிப்லப் தேவ், திரிபுராவில் பள்ளிப் படிப்பை முடித்தார். திரிபுரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார், ஆர்.எஸ்.எஸில் இணைந்தார். பிறகு 15 வருட இடைவெளிக்குப் பிறகு திரிபுரா திரும்பினார்.

மேலும் படிக்க

பிப்லப் குமார் தேவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிப்லப் குமார் தேவ்
பிறந்த தேதி 25 Nov 1971 (வயது 54)
பிறந்த இடம் உதய்ப்பூர், கோமதி மாவட்டம், திரிபுரா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் சமூக சேவை
தந்தை பெயர் ஹிருதுன் தேவ்
தாயார் பெயர் தகவல் இல்லை
துணைவர் பெயர் நிதி தேவ்
துணைவர் தொழில் சேவை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை மேலாளர், நாடாளுமன்ற கிளை, புதுதில்லி
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
இணையதளம் N/A

பிப்லப் குமார் தேவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.86 CRORE
சொத்துக்கள்
₹2.14 CRORE
கடன்கள்
₹27.79 LAKHS

பிப்லப் குமார் தேவ் சுவாரசிய தகவல்கள்

சுற்றுலா இவரது பொழுது போக்காகும். இவருக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். நரேந்திர மோடியை தனது குருவாக கருதுகிறார். 2014ல் மோடிதான் டெல்லியிலிருந்து தேவை, திரிபுராவுக்கு அனுப்பி வைத்தார். இதற்குக் காரணம் மிகச் சிறந்த ஆர்எஸ்எஸ் தொண்டராக தேவ் விளங்கியதுதான். மகாபாரத காலத்திலிருந்தே இன்டர்நெட்டும், சாட்டிலைட்டும் இருந்ததாக கூறி இடையில் சலசலப்பை ஏற்படுத்தினார் தேவ். அதேபோல சிவில் தேர்வு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த தேர்வுகளில் மெக்கானிக்கல் என்ஜீனியர்களுக்குப் பதில் சிவில் என்ஜீனியர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அதேபோல சர்வதேச அழகிப் போட்டி குறித்தும் கருத்து கூறி சிக்கலில் மாட்டினார். இந்தக் கருத்தை அவர் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுக்கு எதிராக கூறியதாக சர்ச்சை வெடித்தது.

பிப்லப் குமார் தேவ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: பனமலிப்பூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அமல் சக்ரபர்த்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் தேவ். 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி திரிபுரா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2017: 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சுதீப் ராய் பர்மன் தலைமையில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜகவுக்கு கொண்டு வர உதவினார்.
  • 2016: 2016 ஜனவரி 7ம் தேதி திரிபுரா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2014: திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பிப்லப் குமார் தேவ். திரிபுராவில் பாஜகவை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார்.

பிப்லப் குமார் தேவ் சாதனைகள்

இவரது ஆட்சிக்காலத்தின் முதல் ஆறு மாதத்தில் திரிபுரா மாநிலத்தில் போதைப் பொருள் கும்பலை ஒடுக்கி சாதனை படைத்தது. 2018ம் ஆண்டு 40,000 கிலோவுக்கும் மேற்பட்ட கொகைன், ஹெராயின், பிரவுன் சுகரை கைப்பற்றினர்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+