முகப்பு
 » 
டி.ரவிக்குமார்

டி.ரவிக்குமார்

டி.ரவிக்குமார்

விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்தலைவர் ஆவார். தனது தொகுதியில் மின்னனு கழிவு நீக்கும் கருவிகளை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தார்.

டி.ரவிக்குமார் சுயசரிதை

விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்தலைவர் ஆவார். தனது தொகுதியில் மின்னனு கழிவு நீக்கும் கருவிகளை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தார். தமிழக எழுத்து உலகில் அறியப்படும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். சாதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நவாயனா என்ற பதிப்பகத்தை தொடங்கி இவர் நடத்தி வருகிறார். சாதி எதிர்ப்பு ஆர்வலரான ரவிக்குமார், 90களில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களைத் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நிறபிரிகை என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராக உள்ளார், கடலூர் மாவட்டம் காட்டுமன்னாகோயில் எம்.எல்.ஏ.வாகவும் இவர் இருந்துள்ளார். எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில், மின்னனு கருவிகள் மூலம் கழிவுகளை கையாள்வதற்கு ஏற்றப்படி திட்டங்களை கொண்டு வந்தார்.

2006 ஆம் ஆண்டில், கடலூர் மாவட்டம் கட்டுமன்னார்கோயிலிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு டி ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பி.எல்., பி.எச்.டி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்புகளை இவர் படித்து இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இவர் உள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் வி.சி.க கூட்டணி கட்சியான திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் இருந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்று எம்பியானார்.

மேலும் படிக்க
By Keshav Karna Updated: Monday, April 5, 2021, 12:50:37 PM [IST]

டி.ரவிக்குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டி.ரவிக்குமார்
பிறந்த தேதி 10 Jun 1961 (வயது 62)
பிறந்த இடம் சென்னை, தமிழ்நாடு
கட்சி பெயர் Viduthalai Chiruthaigal Katchi
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் துரைசாமி
தாயார் பெயர் NA

டி.ரவிக்குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹51.41 LAKHS
சொத்துக்கள்:₹65.1 LAKHS
கடன்கள்: ₹13.69 LAKHS

டி.ரவிக்குமார் சுவாரசிய தகவல்கள்

ரவிக்குமார் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி, சாதி எதிர்ப்பு ஆர்வலர்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ரவிக்குமாருக்கு எதிராக இதேபோன்ற சதித்திட்டத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டனர்.
கொலையாளிகளால் குறிவைக்கப்பட்ட 26 பகுத்தறிவு மற்றும் முற்போக்குவாதிகளில் இவரும் ஒருவர்.

டி.ரவிக்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • . 2019 மக்களவைத் தேர்தலில் வி.சி.க கூட்டணி கட்சியான திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் இருந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு இவர் 5 லட்சம் வாக்குகள் வெற்றிபெற்று எம்பியானார்.
2011
  • 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முருகுமாரனிடம் 31725 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2006
  • 2006 ஆம் ஆண்டில், கடலூர் மாவட்டம் கட்டுமன்னார்கோயிலிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு டி ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசை சேர்ந்த வள்ளல்பெருமான் என்பவரை 13414 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

முந்தைய வரலாறு

1990
  • நிறப்பிரிகை பத்திரிக்கை ஆசிரியர்

டி.ரவிக்குமார் சாதனைகள்

2010ல், தமிழ்நாடு மாநில அரசால் வழங்கப்பட்ட அறிஞர் அண்ணா விருதை ரவிக்குமார் வென்றார். விடியல் அறக்கட்டளை மூலம் பாரதி விருதை (2019) பெற்றார். கவிதைகள் குறித்த பல புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X