Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி வி சதானந்த கவுடா

டி வி  சதானந்த கவுடா
தேவரகுண்ட வெங்கப்பா சதானந்த கவுடா கர்நாடகாவின் தீவிர அரசியல்வாதி மற்றும் முன்னாள் முதல்வர் ஆவார். அவர் கர்நாடக மாநிலத்தின் 26 வது முதலமைச்சராக, பி.
By Shalini | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

டி வி சதானந்த கவுடா சுயசரிதை

தேவரகுண்ட வெங்கப்பா சதானந்த கவுடா கர்நாடகாவின் தீவிர அரசியல்வாதி மற்றும் முன்னாள் முதல்வர் ஆவார். அவர் கர்நாடக மாநிலத்தின் 26 வது முதலமைச்சராக, பி.எஸ். எடியூரப்பா 2011 ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராஜினாமா செய்த போது தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது மத்திய அமைச்சரவையில் புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக உள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். பெங்களூர் வடக்கு தொகுதியில் இருந்து 16 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்தினால் ரயில்வே அமைச்சகத்திலிருந்து சட்டம் மற்றும் நீதித்துறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் படிக்க

டி வி சதானந்த கவுடா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டி வி சதானந்த கவுடா
பிறந்த தேதி 01 Jan 1970 (வயது 56)
பிறந்த இடம் மாண்டேகோலு கிராமம் , சூலியா தாலுகா, கர்நாடகம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தந்தை பெயர் வெங்கப்பா கவுடா
தாயார் பெயர் கமலா
துணைவர் பெயர் டாட்டி சதானந்தா
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகன்(கள்)
இணையதளம் http://sadanandagowda.com/

டி வி சதானந்த கவுடா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.19 CRORE
சொத்துக்கள்
₹9.89 CRORE
கடன்கள்
₹3.7 CRORE

டி வி சதானந்த கவுடா சுவாரசிய தகவல்கள்

கர்நாடகாவின் தக்ஷினா கன்னட மாவட்டத்தில் பிரபலமான "யக்ஷகாண" நாட்டுப்புற கலைகளில் பங்குபெற்றார். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது அவருக்குப் பிடித்தமானது. மைசூர் பல்கலைக்கழகம் சார்பில் கோகோ, கபாடி, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் இடம் பெற்றுள்ளார்.

டி வி சதானந்த கவுடா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 2014 ஆம் ஆண்டு மே 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக சதானந்த கவுடா பதவியேற்றார். ரயில்வே அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அன்று தனது முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
  • 2013: மே 2013 தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக டி.வி. சதானந்த கவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2012: ஜூலை 2012 இல், கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார்.
  • 2011: 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, சுரங்க ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பதவி விலக நேரிட்டது. இதையடுத்து டி.வி.சதானந்த கவுடா கவுடா முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 2011 இல் அவர் கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009: 2009ல் நடந்த 15வது மக்களைவத் தேர்தலில் உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் இருந்து சதானந்த கவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006: சதானந்த கவுடா 2006ம் ஆண்டு கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியமைத்தது அதுவே முதல் முறையாகும்.
  • 2005: சதானந்த கவுடா 2005 ஆம் ஆண்டில் காபி வாரிய இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
  • 2004: 2004 ஆம் ஆண்டில், அவர் 14 வது மக்களவைத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரப்ப மொய்லியை தோற்கடித்தார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறைக்காான லோக்சபா குழு உறுப்பினராக செயல்பட்டார்.
  • 2003: சதானந்த கவுடா 2003 ஆம் ஆண்டில், கர்நாடகா சட்டசபையின் பொது கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்தோடு, இதற்கிடையில் , பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக அவர் ஒரு வருடம் பணியாற்றினார்.
  • 2002: சதானந்த கவுடா 2002 ஆம் ஆண்டில், கர்நாடகா சட்டசபையில், அரசு சார் நிறுவனக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2001: 2001 -2002 ஆம் ஆண்டில் அவர் கர்நாடகா சட்டமன்றத்தில் எரிசக்தி, எரிபொருள் மற்றும் ஆற்றல் சக்தி கமிட்டி உறுப்பினராக இருந்தார்.
  • 1999: புட்டூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட சதானந்த கெளடா, காங்கிரஸ் தலைவர் சுதாகர் ஷெட்டியை தோற்கடித்தார். 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை அவர் கர்நாடகா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக செயல்பட்டார்.
  • 1995: 1995ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை, கர்நாடகா அரசின் பெண் வன் கொடுமை தடுப்பு வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார்.
  • 1994: சதானந்த கவுடா 1994ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் வினயா குமார் சொரெகேவை தோற்கடித்தார்.
  • 1983: சதானந்த கவுடா 1988 ஆம் ஆண்டு வரை கர்நாடகா பாஜக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.
  • 1976: ஆரம்பத்தில் ஜன் சங்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் சதானந்த கெளடா. சுலியா சட்டசபைத் தொகுதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் பாஜக உறுப்பினராக மாறினார். பின்னர் தென் கன்னடா பாஜக இளைஞர் அணித் தலைவராகவும், பிறகு தென் கன்னடா பாஜக துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1976: சுலியா மற்றும் புட்டூரில் 1976ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். வட கன்னட மாவட்டம் சிர்சியில் சில காலம் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். பின்னர் தீவிர அரசியலில் குதித்ததால் அப்பதவியிலிருந்து விலகினார்.
  • 1953: சதானந்த கவுடா கேரள எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • Early 70's: புட்டூர், செயின்ட் பிலோமினா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். உடுப்பி வைகுந்த பாலிகா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இந்த சமயத்தில் மாணவர் அரசியல்வாதியாக திகழ்ந்தார். சட்டக் கல்லூரியின் மாணவர் சங்க பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். பின்னர் ஏபிவிபி மாவட்ட பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

டி வி சதானந்த கவுடா சாதனைகள்

மங்களூர் எஸ்.சி.டி.சி.சி வங்கியின் துணைத் தலைவர்
மங்களூர் எஸ்கேஏசிஎம் சொசைட்டியின் இயக்குனர்
மங்களூர் காம்ப்கோவின் இயக்குநர் (1991 - 94)
மாண்டேகோலு எஸ்.சி.சொசைட்டியின் தலைவர்
மாநில பி.எல்.டி வங்கி ஊழியர் தேர்வு குழுவில் 1989 - 90 வரை உறுப்பினராக இருந்தார்.
பாரதீய மஸ்தூர் சங்கம், புட்டூர் பிரிவின் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளராகவும், சுல்லியா தாலுகா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+