Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சுயசரிதை

மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தனது தொழில் வாழ்க்கையை துவங்கியவர், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியலில் குதித்தார்.1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராக தனது அரசியல் வாழ்வை துவங்கிய தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக உள்ளார் தமிழிசை. 2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேலும் படிக்க

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பிறந்த தேதி 02 Jun 1961 (வயது 64)
பிறந்த இடம் நாகர்கோவில், தமிழ்நாடு
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் மருத்துவர், அரசியல்வாதி
தந்தை பெயர் குமரி அனந்தன்
தாயார் பெயர் கிருஷ்ணகுமாரி
துணைவர் பெயர் டாக்டர். பி. சவுந்தரராஜன்
துணைவர் தொழில் போராசிரியர், ஶ்ரீ இராமசந்திரா மருத்துவ கல்லூரி சென்னை
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://drtamilisaibjp.com/

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹14.19 CRORE
சொத்துக்கள்
₹21.54 CRORE
கடன்கள்
₹7.35 CRORE

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாரசிய தகவல்கள்

தமிழிசை பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள். இவரது கணவரும், மருத்துவருமான சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். 3 தசாப்தங்களுக்கு மேலாக தனது பகுதியில் மருத்துவராக மிகவும் பிரபலமாக இருக்கிறார் தமிழிசை. பல முக்கிய தமிழ் நாளிதழ் மற்றும் வார இதழ்களுக்காக, ஏராளமான மருத்துவ மற்றும் அரசியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர்களின் தமிழக வருகையின் போது அவர்களது பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்ப்பவர்களில் முக்கியமானவர். பா.ஜ.க தொண்டர்கள் இவரை பாசத்துடன் "தமிழகத்தின் சுஷ்மா ஜி" என அழைக்கின்றனர்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2013: பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஆனார் தமிழிசை
  • 2010: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 2007: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஆனார்
  • 2005: பா.ஜ.கவின் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்
  • 2001: மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்
  • 1999: பா.ஜ.கவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளரானார் தமிழிசை

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாதனைகள்

10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ் தொலைக்காட்சியில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேச்சுக்கலை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார் தமிழிசை.

பெண்களுக்கான 'மகளிர் பஞ்சாயத்து' எனும் வார நிகழ்ச்சியை 5 ஆண்டுகளுக்கு மேல் தூர்தர்ஷனில் நடத்தினார்

பா.ஜ.க விற்காகவும், பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்காகவும், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இவரின் இரு தாத்தாக்களும் சுதந்திர போராட்ட வீரர்கள்

பொதுநலனுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற தமிழிசை, 100க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படிப்பு, இலக்கிய விழாக்கள் என பல்வேறு காரணங்களுக்காக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+